Breaking News

நோர்வே பிரதமர் இலங்கையில்…!

norva

நோர்வே பிரதமர் ஏர்னா சொல்பேக் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர். இவர்கள் இன்று காலை 9.55 மணிக்கு கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 664 விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இலங்கைக்கு வந்துள்ள நோர்வே பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Read More »

எங்கும் முகாம் அமைப்போம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிடிவாதம்..

ruwan01

கடற்படை முகாம் அமைப்பதற்காகவே முள்ளிவாய்க்கால் வட்டுவாகலில் காணி சுவீகரிக்கப்படுவதாகவும், தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, எந்தவொரு இடத்திலும் முகாமை அமைக்கும் உரிமை மத்தியரசுக்கு உள்ளதாகவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வட்டுவாகலில் காணி சுவீகரிப்புத் தொடர்பான அரச அதிபரின் அறிக்கை கிடைத்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் …

Read More »

300 போராளிகளோடு வெளியேற முனைந்த புலிகளின் தலைவர்!!! அடித்துக் கூறும் இவர்…

ltte-ltte-282x130

300 போராளிகளோடு ஊடறுக்க முனைந்த தலைவர்- அதில் தப்பியது யார்: தமிழினி சொல்லிய தகவல் என்ன ? புலிகளின் மகளீர் அணிப் பொறுப்பாளராக இருந்து. பின்னர் ராணுவத்திடம் சரணடைந்து இறுதியாக புற்றுநோயால் இறந்துபோன தமிழினி ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து என்ற புத்தகத்தை எழுதி இருந்தார். இதில் அவர் சொல்லவந்த கருத்தை திரித்து பல, உள்ளடக்கங்களை சிங்கள புலனாய்வு துறை உட்புகுத்தியது யாவரும் அறிந்ததே. இன் நிலையில் புலிகளின் தலைவர் …

Read More »

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் 94 ஈழத் தமிழர்கள்…

aus

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் 94 ஈழத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய குடியேற்ற மற்றும் எல்லைப் பாதுகாப்புத் அலுவலகத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் பெரும்பாலும் சட்டவிரோதமான முறையில் படகில் பயணித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து வருடங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பின்னர், அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே ஈழ ஏதிலிகள் அவுஸ்திரேலியா செல்கின்றனர். எனினும் ஐந்து வருடங்களுக்கு மேலாகவும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Read More »

தமிழர் பிரதேசங்களில் தேவையற்ற வகையில் பௌத்த சின்னங்கள்…

625.117.560.350.160.300.053.800.210.160.90 (13)

தமிழர் பிரதேசங்களில் தேவையற்ற வகையில் பௌத்த சின்னங்கள் வைக்கப்படுவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்பில் இன ரீதியான பரம்பலின் அடிப்படையில் தீர்வுத் திட்டங்கள்முன்வைக்கப்படவில்லை என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிகளவில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் பௌத்த சின்னங்கள் மிகுதியாக வைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரச படையினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அரசாங்கம் இது குறித்து கண்டுகொள்வதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் …

Read More »

துபாய் விமான தீ விபத்தில் 300 பேரை மீட்க உதவிய ரியல் ஹீரோ வீரமரணம்!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (12)

திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்சின் போயிங் ஆ.கே.521 ரக விமானம் துபாயில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை பத்திரமாக மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமது வீரமரணம் அடைந்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்சின் போயிங் ஈ.கே.521 ரக விமானம் 282 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை 10.19 மணிக்கு புறப்பட்டது. சுமார் 4 மணி நேர பயணத்தில் அமீரக …

Read More »

லண்டன் வீதிகளில் திடீர் பாதுகாப்பு!! ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிப்பு…

625.117.560.350.160.300.053.800.210.160.90 (9)

பொதுமக்களை பாதுகாக்க அதிரடியாக களமிறங்கிய லண்டன் பொலிஸ் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி லண்டன் வீதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். லண்டன் மேயர் Sadiq Khan – யின் அறிவுறுத்தலின்படி, உயர் காவல் ஆணையர் Bernard Hogan இதனை அமல்படுத்தியுள்ளார். பொது உத்தரவாதம் மற்றும் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவதே இதன் நோக்கம் ஆகும் என காவல் ஆணையர் கூறியுள்ளார். ஆயுதம் தாங்கிய அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என இதற்கு …

Read More »

தமிழரின் இன்றைய நிலை……?

625.117.560.350.160.300.053.800.210.160.90 (8)

உலகம் விழித்துக் கொண்டிருந்தபோது ஒரு நூறாயிரம் தமிழர்களின் உயிர் குடித்து இனவழிப்புச் செய்து ஆறாத வடுவாகி நிற்கும் முள்ளிவாய்க்கால். தமிழ் இனத்தின் விடியல் இருளில் தள்ளப்பட்ட ஒரு அரசின் ஈவு இரக்கம் அற்ற கொடூர செயல் தான் முள்ளிவாய்க்கால். இன்றைய நிலையில் பிரதான சிங்கள அரசு இரண்டும் பதவியை தக்க வைப்பதிலும் பதவிக்கு வருவதிலுமே மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றனர் என்பது தான் உண்மை. ஈழ மக்களின் நிலை, அவர்களின் எதிர்காலம், …

Read More »

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை

625.117.560.350.160.300.053.800.210.160.90 (5)

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை எமது மக்கள் நம்பத் தயாராக இல்லை. முன்னாள் போராளிகளை சர்வதேச ரீதியிலான வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கையினை விடுத்துள்ளார். இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைத் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தினை வடக்கு மாகாண முதலமைச்சர் திரு க.வி. விக்னேஸ்வரன் திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே …

Read More »

நாம் நிராகரிக்கப்பட்டு விட்டோம், கவனிப்பாரற்று கிடக்க விடப்பட்டுள்ளோம்! வடக்கு முதலமைச்சர்

cv1

இன்றைய உலகில் பலர் நாம் நிராகரிக்கப்பட்டு விட்டோம், கவனிப்பார் அற்றுக் கிடக்க விடப்பட்டுள்ளோம், கைவிடப்பட்டுள்ளோம் என்ற ஒரு பாரிய மனச் சுமையை மனதில் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றார்கள். குடும்பங்களில் பல காரணங்களால் இப்பேர்ப்பட்டநிலை ஏற்படலாம். ஆனால் சமூக ரீதியாக நாம் அவ்வாறு சிந்திப்பவர்களின் ஏக்கத்தைப் போக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் நின்று கொண்டிருக்கின்றோம். பாதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களாக இருக்கலாம், போரினால் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டவர்களாக இருக்கலாம், …

Read More »

Powered by themekiller.com