Breaking News
Home / செய்திகள் (page 4)

செய்திகள்

இலங்கையில் உயிர் அச்சுறுத்தல்!

625.256.560.350.160.300.053.800.461.160.90 (1)

இலங்கையை சேர்ந்த தம்பதி ஒன்றுக்கு நியூசிலாந்தில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த தம்பதியின் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் செயற்படும் பாதாள குழு உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் குறித்த தம்பதியினருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளமையால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது உறவினர்கள் பதாள குழுவினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டமையினால், தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நியூசிலாந்து குடிவரவு மற்றும் பாதுகாப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். …

Read More »

மாவீரர்தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி கிடையாது!! பாதுகாப்பு அமைச்சு

maverar-1

இறந்த உறவினர்களை நினைவுக்கூர்ந்து அஞ்சலி செலுத்துங்கள். ஆனால் விடுதலை புலிகளை மையப்படுத்தி வடக்கில் மாவீரர்தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி கிடையாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 3 தசாப்த கால போரில் உயிர்நீத்த விடுதலைப் புலிகளை நினைவுகூறும் நாளான மாவீரர் தின நிகழ்வுகள் கார்த்திகை 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது

Read More »

கொழும்பில் ஒரு தமிழ் பெயர் கூட இல்லாமல் அழிப்போம்! பழைய எச்சரிக்கை புதிதாக…

rawana-balaya

அரசியல் கைதிகள் என்று கைது செய்யப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்திருப்பது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ராவணா பலய பொளத்த அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் கருணா,கே.பி உட்பட அனைவைரையும் கைது செய்யவேண்டும் என்றும் விடுதலை செய்யப்பட்டவர்கள் சாதாரணமானவர்கள் எனவும் கரும்புலிகள் என அறியப்படும் தற்கொலையாளிகள் எனவும் தெரிவிக்கும் இவ் அமைப்பு எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் கேள்வியெழுப்பி ஜனாதிபதி செயலகம் …

Read More »

பிரபாகரனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழில் சுவரொட்டிகள்!

625.256.560.350.160.300.053.800.461.160.90

தமிழீழ மாவீரர் நாள் மற்றும் பிரபாகரனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையிலான துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read More »

யாழ்.பல்கலையில் மாவீரர் தினம் எழுச்சியுடன் அனுஸ்டிப்பு..

jafna

ஸ்ரீலங்கா இரானுவத்தின் அறிவிப்பையும் மீறி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பங்கேற்புடன் எழுச்சியுடன் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிற்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள், அதில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியை சுற்றி மரக்கன்றுகள் நாட்டினார்கள். அதன் பின்னர் கைலாசபதி கலையரங்கில் ஒன்று திரண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் என பல்கலைக்கழக் சமூகத்தினர் அனைவரும், முன்னதாக ஐந்து நிமிட …

Read More »

பிரான்சில் பரபரப்பு!

ferans

பிரான்சில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் பிக்குகள் ஓய்வு இல்லத்தில் நுழைந்து 70 பேரை பணைய கைதிகளாக பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Montpellier பகுதியில் உள்ள இல்லத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து வெளியான தகவலில், துப்பாக்கி மற்றும் கத்தியுடன் ஓய்வு இல்லத்தில் நுழைந்து மர்ம நபர் ஒருவன் 70 பேரை பணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளான். இந்நிலையில், அங்கிருந்த தப்பித்த பணிப்பெண் ஒருவர் பொலிசாருக்கு தகவல் …

Read More »

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதிக்கவேண்டும்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விடயத்தில் தொடர்ந்தும் பெரும் சர்ச்சையான நிலை நீடித்து வருகின்றது. இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மே மாதம் 18ம் 19ம் திகதிகளில் அஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதற்கு கூட முன்னைய அரசாங்க காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று விடுதலைப்புலிகள் வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருந்த காலத்தில் நவம்பர் மாதத்தில் 21ம் திகதி முதல் 28ம் திகதிவரை மாவீரர் …

Read More »

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் மக்கள்.

kele-7

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்ளை சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சிரமதான பணிகள் இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிரமதானப் பணிகளில் அப்பகுதி மக்கள் மற்றும் வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராசா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் ஆகிய பகுதிகளில் மொத்தமாக மூன்று மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்ற போதிலும், யுத்தத்தின் பின்னர் தேராவில் மாவீரர் …

Read More »

சிங்களத்தில் கடிதம் வந்தால் அதைக் கிழித்து அனுப்பியவருக்கே திருப்பி அனுப்புவேன்.

mk

சிறீலங்கா மத்திய அரசின் உள்ளூராட்சி அமைச்சு வடக்கு மாகாண சபைக்கு தொடர்ந்தும் சிங்களத்தில் கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் நிலையில் இனிவரும் காலங்களில் தனக்கு சிங்களத்தில் ஏதாவது கடிதம் வரும் பட்சத்தில் அதனைக் கிழித்து அனுப்பியவருக்கே திருப்பி அனுப்புவேன் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 66 ஆவது அமர்வு இன்று கைதடியில் அமைந்துள்ள கட்டத்தில் நடைபெற்றது. இதன்போது, கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் …

Read More »

தமிழினிக்கு தலைவணங்குகிறேன் – தென் மாகாண ஆளுநர்.

thamilini

சமூகத்தில் காணப்படும் முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் உண்மைகளை தன் நூலின் மூலம் வெளிக்கொணர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணி பொறுப்பாளர் தமிழினி ஜெயக்குமாரனுக்கு தலைவணங்குகிறேன் என தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். சேர் பொன்.இராமநாதனின் ஜனன தினத்தை முன்னிட்டு, தென் மாகாணத்தின் காலி நகரில் எதிர்வரும் 30 திகதி பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (வியாழக்கிழமை) …

Read More »

Powered by themekiller.com