Breaking News
Home / செய்திகள் / தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு பிரித்தானியாவில் கைகூடும் வாய்ப்பு!

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு பிரித்தானியாவில் கைகூடும் வாய்ப்பு!

முள்ளிவாய்க்கால் பின்னடைவின் பிற்பட்ட காலப் பகுதியில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் நிகழ்ச்சி நிரலில் பல்வேறு முன் முயற்சிகளும் பரிசோதனைகளும் இடம்பெற்றன. அவை சாதகமானதும்  பாதகமானதுமான வெவ்வேறு பெறுபேறுகளை பெற்றன. 

இக் காலகட்டப் பகுதியில் தமிழ் மக்களின் முயற்சிகளுக்கு சமாந்திரமாக அவர்களது கூட்டு முயற்சிகளை சிதைக்கும் போக்குகளும் இடம்பெற்றன. செயல்படும் அமைப்புகள் மற்றும் செயல்பாட்டாளர்களிடையே பல்வேறு முரண்பாடுகளை கண்டு வெதும்பிய புலம்பெயர்வாழ் தமிழ் மக்கள் மத்தியில் மேலோங்கிய விரக்தியின் காரணமாக எடுக்கப்படும் முயற்சிகள் அதன் பூரணத்துவத்தை அடைய முடியவில்லை. கடந்த காலங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு முயற்சிகள் தமிழ் மக்களின் ஒற்றுமை நோக்கி அடி எடுத்து வைத்தாலும் எதோ ஒரு விதமாக அவை சிதைவடையும் போக்கும் இடம்பெற்று வந்தன. IMG_1544
 
நீண்ட கால முயற்சிகளின் பின்புலத்தில் முதல்கட்டமாக பிரித்தானியாவில் அனைத்து முக்கிய அமைப்புகள் மற்றும் செயல்பாட்டாளர்களுடன் ஒரு கலந்துரையாடலினை கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரித்தானிய தமிழர் பேரவை ஈலிங்கில் ஏற்பாடு செய்திருந்தது. பிரித்தானியா புலம்பெயர் தமிழ் மக்களின் வாழ்வியலில் சேவையாற்றி வரும் நீண்ட கால  செயல்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை பெரும் நம்பிக்கை தரும் ஆரம்பமாகவிருந்தது. இம் முதற்கட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியாமல் போன சில அமைப்புகள் இம் முயற்சிக்கான தார்மீக ஆதரவினைத் தெரிவித்திருந்ததுடன் எதிர்காலத்தில் கலந்து கொள்ளும் ஆர்வத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.
 
இதில் கலந்து கொண்டவர்கள் எந்த அமைப்பையோ தனி நபரையோ விமர்சிக்காமல் தமிழ் மக்களின் உடனடி மற்றும் நீண்ட கால தேவைகள் குறித்த பல்வேறு அம்சங்களை முன்வைத்து மிக்க ஆரோக்கியமான முறையில் தம் கருத்துக்களை முன் வைத்தமை புதியதோர் ஆரம்பமாக அமைந்தது. 
 
கலந்துரையாடலின் இறுதியில் ஒரு தற்காலிக ஏற்பாடாக அதில் கலந்து கொணடவர்களை உள்ளடக்கிய ஒரு ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தம் அமைப்புகளுடன் கலந்துரையாடி அடுத்த கட்ட கலந்துரையாடல் மற்றும் அதன் அடிப்படைகள் பற்றிய கருத்துக்களுடன் மீண்டும் ஒன்று கூடுவதற்கு தம் விருப்பத்தினை தெரிவித்ததன் அடிப்படையில் மின்னஞ்சல் மூலமாக தொடர்பாடல்களை ஏற்படுத்தி அடுத்த கட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com