Breaking News
Home / பிரதான செய்திகள் / கடந்த அரசாங்கத்தின் அமைச்சர் கொலைகளுக்கு உத்தரவிட்டார்!

கடந்த அரசாங்கத்தின் அமைச்சர் கொலைகளுக்கு உத்தரவிட்டார்!

பல்வேறுபட்ட அரசியல் மாற்றங்கள் ஏற்படக்கூடும் காலகட்டமாக தற்போது இலங்கை மாறி வருவதனை அவதானிக்க முடியுமானதாக இருக்கின்றது. இவை தொடர்பில் பல செய்திகள் வெளிவருகின்றன.

அவற்றில் மிக முக்கியமானவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தண்டிக்கப்பட உள்ளதாகவும், சரத் பொன்சேகாவிற்கு புதுப் பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாகவும் வெளிவரும் செய்திகளே.

இந்த நிலையில் நேற்றைய தினம் இது குறித்து சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எனக்கு புதுப்பதவி வழங்கப்படுவது குறித்து இன்னும் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை. ஆனாலும் இந்த தகவலை அறிந்த பலரும் மிக அச்சத்தில் உள்ளார்கள்.

ஒரு சில அரசியல் அற்ற தலைவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோல் குமார் குணரத்னம் 1989ஆம் ஆண்டு என்னிடம் மாட்டிக் கொண்டபோது.,

என் காலில் விழுந்து கதறியதால் மன்னிப்பு கொடுத்தேன். அந்த நன்றியை மறந்து விட்டு இன்று என்னைப்பற்றி அவர் விமர்சிப்பது அத்தனை நல்லதல்ல எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதன் மூலமும், அண்மையில் பிரதமரும் பொன்சேகாவின் பதவி முடிவு செய்யப்படவில்லை என்பதன் மூலமும் பொன்சேகாவின் பதவி பேச்சளவில் உள்ள ஓர் விடயம் என்பது தெளிவாகின்றது.

இதேவேளை மற்றொரு பக்கம் மகிந்த அணியினருக்கு மிக இக்கட்டான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டு கொண்டு வரப்படுவதாகவும், அதனையும் தாண்டி அவரை கொலை செய்யவும் திட்டம் தீட்டப்படுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

இவற்றில் மகிந்த அணி சார்ந்தோர் கூறும் முக்கியமான விடயம், மகிந்தவை விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய புலம் பெயர் அமைப்புகளிடம் ஒப்படைக்க அரசு திட்டமிடுவதாகவே.

இதன் மூலம் அவர்கள் மறைமுகமாக கூறுவது மகிந்தவை போர்க் குற்றங்களில் சிக்கவைப்பது என்பதனையே. மேலும் அதனை நம்ப வைப்பதற்காகவும், வலுப்படுத்தவுமே சரத் பொன்சேகா களமிறக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும் அவருடைய புதுப்பதவி இன்று வரை உறுதி செய்யப்பட வில்லை என்பதே உண்மை. ஆனாலும் அதற்கு முன்னர் ஏன் இவ்வாறாக சலனங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கேள்வி பிரதானமானது.

குறிப்பாக நேற்றைய தினம் சரத் பொன்சேகா நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறியது முன்னாள் பாதுகாப்பு செயளாளர் கோத்தபாயவையே என அரசியல் தரப்பு அவதானிகள் கூறிவருகின்றனர்.

காரணம் கோத்தபாயவிற்கு எதிராக, லசந்த கொலை வழக்கு, அதிகார முறைக்கேடு போன்ற பல குற்றங்களுக்கு அரசு ஆதாரங்களை கைவசம் இருப்பதாக பகிரங்கமாக தெரிவித்து வருகின்றதனால் எனவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் இரட்டைக் குடியுரிமைப் பெற்ற கோத்தபாயவை தற்சமயம் கைது செய்வது சாத்தியமற்றது. காரணம் இப்போது அவர் உள் நாட்டில் இல்லை அமெரிக்காவில் இருப்பதாகவே தகவல்கள் வெளிவருகின்றன.

இது ஒரு புறம் இருக்க பொன்சேகாவின் பதவி தீர்மானம் நிறைவேற்றப்பட முன்னர் “மகிந்தவை நான் தண்டிப்பேன் என வெளிப்படையாக பொன்சேகா கூறுவதும்”

மகிந்த அணியினர் அதனை வைத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முனைவதும் அதற்கு பிரதமர், மற்றும் ஜனாதிபதி அமைதியை காத்து வருவதும் வேடிக்கைக்குரியதே.

காரணம் அண்மையில் மே தினக் கூட்டத்தில் மகிந்தவின் மக்கள் செல்வாக்கை வெளிப்படையாக காட்டிய மகிந்தவையோ அல்லது, போரின் பிரதான பங்கினை வகித்த கோத்தபாயவையோ சர்வதேச விசாரணைக்கு முன் நிறுத்துவது.,

அல்லது பொன்சேகா கூறியது போல் தண்டிப்பதோ இலகுவான விடயம் அல்ல. அது அரசுக்கு எதிராக பாரிய ஆபத்தாக முடிந்து போகலாம் அது மட்டும் இல்லாமல் அதனை செய்ய அரசு முயற்சியும் செய்யாது.

அப்படி நிகழும் பட்சத்தில் இன்று வரை மகிந்தவிற்கும், கோத்தபாயவிற்கும் இராணுவத் தரப்பில் செல்வாக்கு என்பது, ஆரம்பத்தில் இலங்கையில் இராணுவப் புரட்சி ஏற்படப்போவதாக வெளியான தகவல்கள் கூட நிஜமாகிவிடும்.

இந்த நிலையில் அவர்களை யுத்த குற்றத்தில் நிறுத்துவது சாத்தியமற்றது. இந்த விடயம் அரசுக்கும் தெரியும் அதேபோல் மகிந்தவிற்கும் நன்றாகவே தெரியும்.

ஆனாலும் அரசு மகிந்தவை தண்டிக்கப் போவதாக மக்களிடையே பரப்பப்பட்டு வருகின்றது. இதன் காரணம் என்ன? பின்னணியில் இயக்கி வைப்பது யார்?

இந்தக் கேள்விகளுக்கு வெளிப்படையாக தெரிந்த விடயம் அரசு தரப்பு மக்களுக்கு காட்டும் ஓர் கண்ணாம்பூச்சி ஆட்டமே இப்போது நடைபெற்று வருகின்றது என்பதே.

உதாரணமான, மகிந்த அணியினர் கூறும் வகையில் அரசு மகிந்தவை சர்வதேச விசாரணைகளில் சிக்க வைக்குமானால், போர்க் குற்றம் பற்றி வெளிவரும்.

அத்தோடு இப்போது வரை மர்மமாக இருக்கும் பிரபாகரனின் மரணம், அரசியல் கைதிகள் கொலை, மக்கள் கொலைகள், உட்பட பலதரப்பட்ட விடயங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அவை வெளிப்படுமானால் நாட்டில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதோடு, அரசு மற்றும் மகிந்த அனைவரையுமே மக்கள் எதிரிகளாக பார்க்கக் கூடும், அதனால் இனக் கலவரங்கள் வெடிக்கலாம்.

இந்த விடயம் அறியாத நிலையில் மகிந்தவோ அரசோ இல்லை என்பதே உண்மை. அதேபோல் இதற்கு இப்போது அரசு தரப்பில் உள்ளவர்களும் கூட பதில்களைக் கூற வேண்டிய நிலை ஏற்படும்.

அது மட்டுமல்ல இலங்கையில் நடைபெற்ற குற்றங்களுக்கு ஓர் கோர்வையாகவே தண்டனைகள் வழங்கப்படவேண்டும். ஒரு தனிப்பட்ட நபரை மட்டும் குற்றவாளியாக்கி முற்றுப்புள்ளியை வைத்து விட முடியாது என்பதே கடந்த காலங்களை மீட்டிப் பார்க்கும் போது தெளிவாக தெரியும் விடயம்.

ஆனாலும் இவை தெரிந்தும் ஏன் இவ்வாறான குழப்பங்கள் நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும்? இந்தக் கேள்விக்கு விடை உள்நோக்கமுடைய ஓர் அரசியல் நாடகமே தற்போது நடைபெற்று வருவதாகவே கூறப்படுகின்றது.

மகிந்தவை முன்னிறுத்தி ஓர் திட்டமிட்ட அரசியல் நாடகமே தற்போது அரங்கேற்றப்பட்டு வருகின்றது என்பதே அரசியல் அவதானிகளின் கருத்து.

மகிந்தவை தண்டிக்க அரசு நினைத்திருந்தால் ஆட்சிக்கு வந்த காலகட்டத்திலேயே அதனை செய்து இருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் இப்போது அதற்கான தீவிரத்தை காட்டுவதாக சித்தரிக்கப்படுவது வெளிப்படையில் வேடிக்கையானதே.

அந்தவகையில் மே தினக் கூட்டம், பொன்சேகாவின் புதுப்பதவி, மகிந்தவின் தண்டிப்பு கதைகள், போன்ற அனைத்துமே அனைவரும் இணைந்து மக்களுக்கு காட்டும் ஓர் இலாபகர அரசியல் விளையாட்டு என்றே கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com