Breaking News
Home / புலனாய்வு / தமிழீழத் தேசியச் செயற்பாட்டுக்கு சவால் விடும் பிரான்சு வன்முறைக்குழுக்கள்.

தமிழீழத் தேசியச் செயற்பாட்டுக்கு சவால் விடும் பிரான்சு வன்முறைக்குழுக்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் 16ம் திகதி பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நிகழ்வில், ஈழம்போய்ஸ் என்ற காவாலிகள் உட்புகுந்து அங்கிருந்த முன்னாள் போராளிகள், மற்றும் கழக செயற்பாட்டாளர்கள் மீது கம்பிகள், தடிகள் கொண்டு கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டதில் பலர் காய மடைந்தனர் என அறிய முடிகின்றது.eelamboys-1

இது பற்றி மேலும் தெரியவருவதாவது ஸ்தான் மைதானத்தில் அன்று காலையில் இருந்து அங்கு பிரசன்னமாகியிருந்த ஈழம்போய்ஸ் என்று அழைக்கப்படும் இக்குழுவினர், அங்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற சமயம் மதுபானங்களை அருந்தியபடி அங்கு நின்றவர்களை பார்த்து தகாத வார்த்தைகளை பேசியபடியும் விளையாட்டுக்களை குழப்பும் முகமாக செயற்பட்டதையும் அறிய முடிகின்றது.

eelam-boys-2 eelamboys-3

மாலை 18 மணிக்கு விளையாட்டுக்கள் நிறைவடையும் தருணத்தில் 6 பேர் கொண்ட குழுவினர் அங்கு மேற்பார்வையில் இருந்த முன்னாள் போராளிகளை தாக்கியுள்ளார்கள். இதில் குறிவைக்கப்பட்ட போராளி ஒருவரை அவரது செயற்பாட்டினை முடக்கும் நோக்கில் அவரை மிகவும் படுகாயம் ஏற்படும் வண்ணம் இவர்கள் தாக்கியுள்ளார்கள்.

ஈழம்போய்ஸ் எனப்படும் இக் குழுவினர் பிரான்சில் தொடர்ந்து வன்முறைகளை செய்து வருகின்றமையும், மக்களை பயமுறுத்தி பணப்பறிப்பு போன்ற செயற்பாடுகளை செய்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
kethukaluvaa

இவ் வன்முறைக்குழுவினர் தங்களின் தாக்குதலை நியாயப்படுத்தியமையும், அதே சமயம் “பிரான்சில் இயக்கபடம் காட்ட வேண்டாம”; என முகப்புத்தகத்தில் எச்சரித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

kethu-stade

இக் குழுவானது வவுனியாவில் இயங்கும் ரெலோ அமைப்பில் செயற்பட்ட “வெள்ளை” என்றழைக்கப்படும் நபரினதும் “மைந்தன்” என்பவரினதும் வழிகாட்டலில செயற்படுகின்றது. இதில் “மைந்தன்” என்பவர் தற்போது கனடாவில் தனது துணைவியாருடன் இருப்பதாகவும், கனடாவில் இருந்து இங்கு இருக்கும் சிலரை வைத்து இவ் ஈனச்செயற்பாட்டினை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

mainthanvellai

மைதானத்திற்கு வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். கெத்து,களுவா, என்றழைக்கப்படுபவர்களே மைதானத்துக்குள் வந்தவர்கள் என்பதையும், இது போன்ற செயற்பாட்டினை இவர்கள் நிறுத்திக்கொள்வது சாலச் சிறந்தது என்பதையும் ஒரு முன்னாள் போராளி எமக்கு இச் சம்பவத்தை குறிப்பிட்ட போது குறிப்பிட்டார்.

இதே போன்று கடந்த நவம்பர் மாதம் மாவீரர் நாள் துண்டுப்பிரசுரங்களை வழங்கி கொண்டிருந்தபோது “வெண்ணிலா” என்ற வன்முறைக்குழுவினர் இது போன்றே போராளிகள் மீது தாக்குதல் மேற்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com