Breaking News
Home / செய்திகள் / உலக அதிசயங்களை வென்று விடும் தமிழர் அதிசயம்..!

உலக அதிசயங்களை வென்று விடும் தமிழர் அதிசயம்..!

இதுவே நாம், இது எம் கலாச்சாரம் இதுவே எம் பெருமை என உலகறிய செய்த ஓர் கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம்.பண்டைய தமிழர்கள் தமது சமயம், கலை, பண்பாடு போன்றவற்றினை உலகம் முழுவதற்கும் வெளிப்படுத்தும் பொருட்டு அக்காலத்தில் உலகம் முழுதும் இந்துக் கோயில்களை அமைத்தனர்.

இந்த வகையில் உலகில் உள்ள அனைத்து அதிசயங்களையும் வென்று விடும் அளவிற்கு கம்போடியாவில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழர் அதிசயமாக அமைக்கப்பட்டுள்ளது ஓர் இந்துக் கோயில்.

அங்கோர் angkor என்பது கம்போடியாவிலுள்ள ஒரு இந்துக் கோயில் இது இரண்டாம் சூரியவர்மன் கிபி 1113-1150 காலப்பகுதிகளில் அப்போது யசோதரபுரம் என அழைக்கப்பட்ட இப்போதைய அங்கோர் நகரில் கட்டப்பட்டது.

ஐந்நூறு ஏக்கர் சுற்றளவு நிலப்பரப்பில் 3 ஆயிரம் கோடி தொன் கருங்கற்களால், 10 இலட்சம் பணியாளர்களால் 40 ஆண்டுகளில் கட்டப்பட்ட உலகின் மிகப் பெரிய கோவிலாக இது விளங்குகிறது.

500 ஏக்கரில் கோவில் அமைக்க எத்தனை ஆழம், அகலம் கொண்டு அஸ்திவாரம் செய்திருப்பார்கள் என்பது வியக்கத்தக்கதே அதுவும் அந்த காலத்தில்.

இந்த கோயில் தொழில் நுட்ப அறிவு மிகக்குறைந்த காலப்பகுதியில் இவ்வளவு நுட்பமாக, இப்போதைய கட்டுமானர்களும் கூட வியக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் பழமையுடன் ஒப்பிடும் போது இப்போதும் கம்பீரமாக உயர்ந்து நிற்பது தொல்பொருள் ஆய்வாளர்களை திகைத்த வைத்துள்ளது.

கம்போடியாவில் 1200 க்கும் அதிக கோவில்கள் இந்து சமயக் கலாசாரத்தின் வெளிப்பாடாக அமைக்கப்பட்டுள்ளன.

இவை. கலை, கலாச்சாரத்தோடு தமிழரின் வியக்கத்தகு தொழில் நுட்பம், தொன்மையோடு பிரமிக்கத்தக்க அமைப்பு அனைத்தையும் இணைத்து உலக அதிசயமாக காட்சி தருகின்றது இந்த ஆலயம்.

இந்த கோவில் சுமார் 200 ஆண்டுகளாக வழிபாடுகள் இன்றி காணப்பட்டுள்ளது. தற்பொழுது ஜப்பான் மற்றும் ஜெர்மன் நாட்டினர் திருப்பணி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். கருவரை விக்ரகங்கள் காட்சிக்காக மாறிவிட்டன என்பது வேதனையான விடயம்.

கம்போடியா முற்காலத்தில் கம்பூச்சியா என அறியப்பட்ட ஒரு தென்கிழக்கு ஆசிய நாடாகும். இந்நாட்டில் ஏறக்குறைய 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

தேசியக் கொடியில் இந்துக் கோயிலின் உருவத்தை கொண்டுள்ள ஒரேயொரு நாடு என்ற சிறப்பு கம்போடியாவை தவிர வேரு எதற்கும் இல்லை. பண்டைய தமிழ் இலக்கியங்களில் கம்புஜம் அல்லது காம்புசம் என்று அழைக்கப்படும் இந்த நாடு காலத்தின் போக்கிற்கு ஏற்ப மாறிப்போய் விட்டது.

நெடுங்காலமாக காட்டு மரங்களால் மூடப்பட்டு வெளி உலகிற்குத் தெரியாமல் கிடந்த அங்கோர் வாட் ஆலயம் கம்போடியா பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில் இருந்த போது ஒரு பிரெஞ்சு ஆய்வாளனால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் கோயிலின் உட்புறத்திலும் அதைச் சுற்றியும் நெருக்கமாக வளர்ந்த மரங்களை வெட்டி அப்புறப் படுத்திக் கோயிலின் தோற்றத்தைக் வெளிப்படுத்தி உலகறிய வைக்கவே பல வருடங்கள் ஆகிப்போனதாம்.

தமிழர் கலாச்சாரம் உலகம் முழுதும் பரவி காணப்பட்டது என்பதற்கு இந்தக் கோயில் ஓர் முக்கிய ஆதாரம். உலக அதிசயசயமாக இருக்கும் அங்கோர் வாட் கோயிலின் காரணமாக சியம் றியப் எனப்படும் நகருக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டிலும் கூட ஓர் இன அழிப்பு நடைபெற்றுள்ளது அதனால் கூமார் 10 மில்லியன் மக்கள் கொன்று அழிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக பல்வேறு மாற்றங்களை சந்தித்தது இந்த நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உலக அதிசயமாக காணப்பட்ட ஓர் வரலாற்று பெருமை வாய்ந்த இடம் இப்போது மாற்றமடைந்து போய்விட்டது. அதற்கான காரணம் இப்போதைய தமிழர்களை கூறுவதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com