Breaking News
Home / செய்திகள் / உலகளாவிய ரீதியில் பிரான்ஸ் எத்தனையாவது இடம்? பணியாற்ற வேண்டிய நேரம் எவ்வளவு?

உலகளாவிய ரீதியில் பிரான்ஸ் எத்தனையாவது இடம்? பணியாற்ற வேண்டிய நேரம் எவ்வளவு?

உலகளாவிய ரீதியில் குறைந்த மணித்தியாலத்திற்கு வேலை செய்யும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அதிக சம்பளம் வழங்கும் நாடுகள் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இத்தாலி முதலிடத்தை பிடித்துள்ளதுடன், பிரான்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது பிரஜைகளுக்கு தொழில் வழங்கும் போது அவர்களின் மன நிலைமை, ஓய்வு மற்றும் சம்பளம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படுகிறது.

குறித்த நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் மற்றும் அபிவிருத்தியடையாத நாடுகளை விடவும் குறைந்த அளவிலான நேரத்திற்கு மாத்திரமே தொழில் ஈடுபடுகின்றனர்.

அதற்கமைய வளர்ச்சியடையாத நாடுகளிலுள்ள பிரஜைகள் வருடம் ஒன்றுக்கு வேலையின் நிமித்தம் பணியிடத்தில் செலவிடும் நேரத்தை விடவும், குறைவான நேரமே குறித்த நாடுகளின் மக்கள் தொழில் ஈடுபடுகின்றனர்.

எனினும் அவர்களுக்கு வளர்ச்சியடையாத நாடுகளுடன் ஒப்பிடும் போது அவர்களுக்கு மிகவும் அதிகமான சம்பளமே வழங்கப்படுகின்றது.

அதற்கமைய அபிவிருத்தியடைந்த நாடுகளில் எவ்வாறான நிலைமை காணப்படுகின்றன என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தாலியில் வருடமொன்றுக்கு 960 மணித்தியாலங்கள் பணியாற்ற வேண்டும்.

பிரான்ஸில் வருடமொன்றுக்கு 1007 மணித்தியாலங்கள் பணியாற்ற வேண்டும்.

பெல்ஜியத்தில் வருடமொன்றுக்கு 1011 மணித்தியாலங்கள் பணியாற்ற வேண்டும்.

போலந்தில் வருடமொன்றுக்கு 1038 மணித்தியாலங்கள் பணியாற்ற வேண்டும்.

ஜேர்மனியில் வருடமொன்றுக்கு 1053 மணித்தியாலங்கள் பணியாற்ற வேண்டும்.

ஹங்கேரியில் வருடமொன்றுக்கு 1061 மணித்தியாலங்கள் பணியாற்ற வேண்டும்.

நெதர்லாந்தில் வருடமொன்றுக்கு 1081 மணித்தியாலங்கள் பணியாற்ற வேண்டும்.

ஸ்பெயினில் வருடமொன்றுக்கு 1089 மணித்தியாலங்கள் பணியாற்ற வேண்டும்.

நோர்வேயில் வருடமொன்றுக்கு 1116 மணித்தியாலங்கள் பணியாற்ற வேண்டும்.

சுவீடனில் வருடமொன்றுக்கு 1141 மணித்தியாலங்கள் பணியாற்ற வேண்டும்.

அதேவேளை சிறிலங்காவில் வருடம் ஒன்றுக்கு 2000 மணித்தியாலங்கள் பணியாற்ற வேண்டுமென வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

franc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com