Breaking News
Home / செய்திகள் / கிருஷ்ணர் ஏன் கர்ணனை கொன்றார்? ஆச்சரியமூட்டும் தகவல்கள்

கிருஷ்ணர் ஏன் கர்ணனை கொன்றார்? ஆச்சரியமூட்டும் தகவல்கள்

மகாபாரதத்தை மேலோட்டமாக படித்தவர்களும் சரி, மதிநுட்பமாக பின்பற்றும் சிலரும் சரி, கர்ணனை கொன்றது அர்ஜுனன் தான் என நினைப்பார்கள்.

அர்ஜுனன் என்பவர் தன் கையில் கருவியே என மகாபாரதம் முழுவதும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டுகிற போதும், சிலர் இப்படி நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கர்ணன் மற்றும் கிருஷ்ணருக்கு இடையே ஏற்பட்ட யுத்தம், நேர்மையான பாண்டவர்கள் மற்றும் சுய நேர்மையை கொண்ட கர்ணனுக்கும் இடையே நடந்த போர், அதில் உயிரிழந்த பலர், போன்றவைகளைப் பற்றி ஏற்கனவே நாம் பேசியிருக்கிறோம்.

கர்ணனுக்கு ஆதரவாக இருந்த கிருஷ்ணர்

மகாபாரதத்தில், மிக அரிதாக, ஏன் சொல்லப்போனால் ஒரு இடத்தில் கூட, கர்ணனைப் பற்றி பகை உள்ளத்துடன் கிருஷ்ணர் எங்குமே பேசவில்லை.

சொல்லப்போனால், பல இடங்களில் கர்ணனின் புகழை தான் கிருஷ்ணர் பாடியுள்ளார். தன் ஆற்றல்களைப் பற்றி பெருமையாக பேசிய போதும், கர்ணனைப் பற்றி இழிவாக பேசிய போதிலும், அர்ஜுனனை சில முறை கிருஷ்ணர் எச்சரித்துள்ளார்.

பாண்டவர்களின் நேர்மையான நோக்கத்திற்கு ஆதரவு அளித்து, தன் நண்பனாகிய துரியோதனனுக்கு குருட்டுத்தனமாக ஆதரவு அளிக்க வேண்டாம் என கிருஷ்ணரே கர்ணனிடம் கூறியுள்ளார்.

கர்ணனின் தவறான விசுவாசம்

கர்ணனோ கிருஷ்ணரின் அறிவுரையையோ அல்லது வழிகாட்டலையோ கேட்கவில்லை. இந்த இடத்தில் தான் கர்ணனுக்கு ஆதரவு அளிக்கும் கூட்டம் குவிந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக, தவறான நோக்கத்திற்கான விசுவாசத்தை எண்ணி பரிதாபப்பட தான் முடியும். நல்ல மனிதரின் வியக்க வைக்கும் குணமாக அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

கிருஷ்ணரின் பாத்திரம்

விதிமுறைகளை எப்போதும் பின்பற்றுபவராக விளங்கும் கிருஷ்ணரின் பாத்திரம் தெளிவாக வடிவமைக்கப்படவில்லை என மகாபாரதத்தைப் பற்றி கருத்துக்களை கூறும் பலரும் நம்புகிறார்கள்.

தன் இலக்குகளை அடைய ஒன்றுக்கு பல முறை அவர் விதிமுறைகளை மீறியுள்ளார். முடிவில் தர்மமே வெல்ல வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதைப் போல் அவர் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மகாபாரதப் போர் ஒரு குடும்ப போர்

இந்து சிந்தனையாளர்களும், மகான்களும் கூறியபடி தர்மத்தின் பரிணாம வளர்ச்சியை இது ஓரளவிற்கு காட்டும். அதன் படி, தீய சக்திகள் தலைத் தூக்கும் போது, நன்மைக்கும் தீமைக்கும் நேரடியாக சண்டை நடக்கும்.

ஆனால் வெற்றி நிச்சயமல்ல.தீய சக்திகளை அழிக்க கடவுளாக இருந்தாலும் சரி, சட்டத்திற்கு புறம்பாக சில ஏமாற்று வேலையில் ஈடுபட்டு, எதிராளியை ஏமாற்ற வேண்டியிருக்கும்.

பல கதைகளில் கூறப்பட்டுள்ளதைப் போல், கிருஷ்ணரின் முழு வாழ்க்கையும் அரசியல் உலகத்தால் நிறைந்துள்ளது.

அதில் நல்ல சக்திகளையும் தீய சக்திகளையும் கண்டு கொள்வது தெளிவாக இல்லை. ராமாயணத்தை போல் இல்லாமல், கிருஷ்ணரின் காலத்தில் நடந்த மிகப்பெரிய போர் அசுரர்களுக்கு எதிரானது அல்ல.

மாறாக, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மூண்ட போராகும்.

நேர்மையான கர்ணனுக்கு கிடைத்த பரிசு

விசுவாசத்தின் பக்கம் நின்ற கர்ணன் நேர்மை என்பதை தேர்ந்தெடுத்தார். இதே உறுதி தான் கர்ணனுக்கு மரணத்தையும் ஏற்படுத்தியது.

தன்னுடைய தம்பிகள் தான் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அதற்கு நியாயம் கற்பிக்க அவர் துரியோதனனை கேட்கவில்லை. மாறாக பாண்டவர்கள், திரௌபதி, தன் சொந்த தாய் மற்றும் தன் குருவின் கைகளால் தான் பட்ட அவதிகள் தான் அவர் மனதில் மேகமாய் சூழ்ந்திருந்தது.

தன்னுடைய தர்மத்தின் படி அவர் வைத்திருந்த விசுவாசமும் அவர் கூறிய காரணங்களும் குற்றமுள்ளதாகவே இருந்தது.

எதிராளியின் உதவியற்ற நிலையைப் பயன்படுத்த நினைத்த கிருஷ்ணர்

கர்ணனே ஒருவித குழப்ப மனநிலையுடன் தான் இருந்தார். துரியோதனனிடம் தனக்கு இருந்த விசுவாசமும், ஆதரவும் பிற அனைத்தையும் உதற செய்தது. அவருடைய ஆற்றல்களும் வலிமையும் இப்போது மட்டுப்படுத்த வேண்டும்.

கிருஷ்ணரின் காரணங்களும் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால், மரணம் ஒன்றே ஒரே தேர்வாக இருந்தது. போரின் முடிவில், ஒருவர் கொல்லப்படுவதால் ஒருவர் தோல்வியைப் பெற வேண்டும். அதனால் எதிராளியின் உதவியற்ற நிலையை கிருஷ்ணர் முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்.

கருணை வாய்ப்புக்களை இழந்து இறந்த கர்ணன்

எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல், சேற்றில் மாட்டிக் கொண்ட தன் ரதத்தின் சக்கரங்களை எடுக்க கர்ணன் முயற்சித்த போது, இப்படிப்பட்ட சந்தர்ப்பம் மறுபடியும் கிடைக்காது என்ற காரணத்தினால், அவரை கொல்ல அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் ஆணையிட்டார்.

கர்ணனுக்கு இனியும் இரக்கம் காட்ட முடியாது என அவர் கூறினார். அவருக்கு இதற்கு முன் கருணையின் அடிப்படையில் அளிக்கப்பட்ட அனைத்து வாய்ப்புகளையும் அவர் இழந்து விட்டார்.

அமைதி காத்து உத்தரவிட்ட கிருஷ்ணர்

அதனால் இந்த நேரத்தில் நல்லொழுக்கங்களைப் பற்றி பேச வேண்டியதில்லை. ஏனென்றால் நல்லொழுக்கங்கள் என வரும் போது அவரும் கூட அது பறிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தார்.

அர்ஜுனனிடம் மேலும் வாக்குவாதங்களுக்கு தடை போட்டார் கிருஷ்ணர். இது தன்னுடைய விருப்பமில்லை, மாறாக அவர் தன் கடமையையே ஆற்றுகிறார் என கிருஷ்ணர் உத்தரவிட்டார்.

இவை அணைத்தும் புராணங்களில் கூறப்படுபவைதான் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com