Breaking News
Home / செய்திகள் / இன்றும் நிர்க்கதியான நிலையில் ஈழத்து தமிழர்!

இன்றும் நிர்க்கதியான நிலையில் ஈழத்து தமிழர்!

மீள்குடியேற்றப்படாமல் பலர் இன்னும் நிர்க்கதியான நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விசனம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவு திட்டம் தொடர்பான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சில இடங்களில் உள்ள மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள போதும் கூட பலர் இன்னமும் மீள்குடியேற்றப்படாத நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக கிளிநொச்சி மற்றும் இரணைதீவு பகுதியில் பல குடும்பங்கள் நிர்க்கதியான நிலையிலுள்ளன.

இரணைமடுவில் மாத்திரம் 400 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படாமல் வாழ்ந்து கொண்டிருப்பது சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் என கூறினார்.

மேலும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கையின் தமிழர் தொடர்பிலும், யுத்தத்தினால் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஆகுதிகள் தொடர்பிலும் மிகவும் பாடுபட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர் தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டதுடன், தனது ஆட்சியின் பொது வரவு செலவு திட்டத்தில் அவர்களுக்காக நிதி ஒதுக்கியதோடு அவர்களுக்கான பிரஜா உரிமையை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்தார் என விஜயகலா மகேஸ்வரன் இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com