Breaking News
Home / செய்திகள் / கார்த்திகை 27இல் புதிய தடை!

கார்த்திகை 27இல் புதிய தடை!

வடக்கில் உயிரிழந்த புலி உறுப்பினர்களின் நினைவு தினத்தை நடாத்த அனுமதிக்குமாறு, அரசாங்கத்திடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும் இந்த கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட ஒன்று என்பதனால், பயங்கரவாத அமைப்புக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரசின் அனுமதி இன்றி வடக்கில் புலிகள் நினைவு தினத்தை நடாத்தப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.

புலிகளை நினைவு கூர வருமாறு வடக்கு தமிழ் மக்களுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள புலி ஆதரவாளர்கள் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி புலிகள் நினைவு தினத்தை அனுஷ்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com