Breaking News
Home / தலைப்புச்செய்தி / போராளிகள் மீது வன்முறை குழுக்களைக் கொண்டு தாக்குதல்

போராளிகள் மீது வன்முறை குழுக்களைக் கொண்டு தாக்குதல்

இன்றைய தினம் 21.11.2016, மாலை நேரத்தில், மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பான விளம்பரத் துண்டுப்பிரசுரங்களை லாச்சப்பல் பகுதியில் வைத்து போராளிகள் பொதுமக்களுக்கு விநியோகித்துக்;கொண்டிருந்தனர்.

அதே நேரம், அங்கு வந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த சுரேஸ் தலைமையிலான குழுவினர் அதைக் கவனித்து, “வெண்ணிலா” என்ற வன்முறைக்குழுவை அந்த இடத்திற்கு அழைத்து, அந்த வன்முறையாளர்களுக்குப் போராளிகளை அடையாளம் காட்டிவிட்டு அந்த இடத்தை விட்டுச்சென்றனர்.

image-0-02-05-c93314a5d876503769ef235a2770eadbae18b24f92d1e17db6e58add8bed11eb-V
அதைத் தொடர்ந்து வன்முறையாளர்கள் போராளிகளை நெருங்கி “என்ன செய்கின்றீர்கள். இது எங்கு நடக்கும் மாவீரர் நிகழ்வு” எனக் கேட்டு விட்டு, இந்த நிகழ்வின் விளம்பரங்களுக்கு இங்கு இடமில்லை எனக் கூறி போராளிகளை தாக்கத் தொடங்கினார்கள்.

இந்தச் சம்பவத்தில் 3 போராளிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.அதே நேரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த ஒருவரும் இந்த வெண்ணிலா வன்முறைக்குழுவினரால் அடையாளம் தெரிந்து கொள்ளாமால் வெட்டப்பட்டுள்ளார்.

இனியாவது தற்போது தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை வழிநடத்துபவர்கள் யார், அதி;ல் அங்கம் வகிப்பவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

தாயகப்போரில் பல இழப்புக்களைச் சந்தித்த பின்னர் புலம் பெயர் நாடுகளுக்கு தஞ்சம் புகுந்த போராளிகள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் செய்யும் அராஜகங்களை பார்த்து பொறுத்துக்கொள்ளாமல், மக்களை இவர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காகவும், தாயகத்தில் அல்லலுறும் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு முடிந்தவற்றை செய்யவும் எண்ணியே, இதுவரை காலமும் பொறுமை காத்தது போதும் என தாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரை பொதுமக்களுக்கு அடையாளம் காட்ட முற்பட்டார்கள்.

edit-photo
இதுவரை காலமும் தாம் செய்த ஏமாற்று வேலைகள் பொதுமக்களுக்கு தெரியவந்துவிடும் என்ற அச்சம் கொண்ட இந்த தமிழர் ஒருங்கிணைப்பக்குழுவினர் தற்போது வன்முறை குழுக்களை கொண்டு போராளிகளை தாக்க ஆரம்பித்து விட்டார்கள்.

விடுதலைப்புலிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இன்று விடுதலைப்புலி போராளிகளையே தாக்குகிறது என்றாhல் இனியும் இந்த கட்டமைப்பு விடுதலைப்புலிகளினது என கூறிக்கொண்டு இருக்கப்போகிறோமர் ?

சிந்திப்போம் ! செயலாற்றுவோம் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com