Breaking News
Home / பாக்கள் / எங்களின் தாய்மொழியே!…

எங்களின் தாய்மொழியே!…

கன்னடம் முன்னிடம் is
சிங்களம் முன்னிடம்
தமிழனை வதைப்பதிலே!

என்னிடம் உன்னிடம்
இருக்கின்ற சொத்தென்ன
எங்களின் தாய்மொழியே!

அதனையும் பேசாது
அந்நியன் ஆனதால்
அந்தரித்தழியும் தமிழா!

உயிருக்குள் தமிழ் விதை
உணர்வுக்கும் மதிப்பளி
உரிமைகள் உன்னைத் தேடும்!

அருமையாய் ஆண்டார்கள்
ஆதித் தமிழ் மன்னர்கள்
எருமையாய் ஆனாய் நீயோ!

எதுவரை இருந்தவன் நீ
எங்கு போய் இருக்கிறாய்
ஏன் என்ன காரணமோ!

இன்னமும் மாறலாம்
இருப்பதைக் காக்கலாம்
உறுதியாய் இணைந்துவிட்டால்!

எண்ணத்தில் நம்பிக்கை
எப்போதும் இருக்கட்டும்
ஏறுவாய் மேலே மேலே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com