Breaking News
Home / தலைப்புச்செய்தி / இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்..

இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்..

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் கடந்த 1990.09.09. அன்று நடைபெற்ற படுகொலை நினைவு நாள் நாளை நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு பனிச்சையடி சந்தியில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆலய வழிபாடுகளுடன் கூடிய பிராத்தனை நடைபெற்று பொதுமக்கள் நினைவுத் தூபிக்கு விளக்கேற்றவுள்ளனர்.

அத்துடன் சர்வதேச விசாரணையை கோரி மனித உரிமை அமைப்புக்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்துருக்கொண்டானில் அன்று நடைபெற்ற படுகொலையில் 5 கைக்குழந்தைகள் 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள் 85 பெண்கள் 28 முதியவர்கள் உட்பட 186 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இன்று வரை கொலைகளுக்கு தீர்ப்பும் கிடைக்கப் பெறவில்லை, குற்றவாளிகளும் தண்டிக்கப்படாமை வேதனைக்குரிய விடயமே. ஏற்றப்படும் விளக்குகள் மூலம் அவர்களுடைய ஆத்மாக்களாவது சாந்தி பெறட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com