Breaking News
Home / முதன்மைச்செய்திகள் / மாங்கனித் தீவு இன்று தமிழர் மண்டை ஓடுகளால் நிறைந்து காணப்படுகின்றது!

மாங்கனித் தீவு இன்று தமிழர் மண்டை ஓடுகளால் நிறைந்து காணப்படுகின்றது!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு தேசம் விடுதலை பெற வேண்டும் ஆயின் அதற்காக போராட வேண்டியவர்கள் நாட்டின் குடி மக்களே அன்றி கொடி தரித்து வரும் மன்னர்களோ மந்திரிகளோ அல்ல.

மன்னர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள் நாட்டின் சாதாரண குடிமக்களே எனவே அநீதியாளர்களின் பிடியிலும் இனவாத மதவாத ஆட்சியாளர்களின் அதிகாரத்தின் கீழேயும் அடக்கியாளப்பட்டு கொண்டிருக்கின்றது.

தமிழினம் பல்லாயிரம் நூற்றாண்டுகளாய் தமக்கான தனித்துவம் மிக்க அடையாளங்களுடன் வாழ்ந்த ஒரு தேசிய இனம். இன்று சிறுபான்னை இனம் என்று அடையாளத்துடன் தமது சொந்த மண்ணிலே அகதிகளாகவும் அடக்கி எடுக்கப்பட்ட சமூகமாகவும் வாழந்து கொண்டிருக்கின்றனர்.

மாங்கனித் தீவு இன்று தமிழர் மண்டை ஓடுகளால் நிறைந்து காணப்படுகின்றது. அதிகாரமற்ற அப்பாவிகளாய் தமிழரின் அடையாளங்கள் தனித்துவங்கள் அனைத்தும் ஆட்சியாளர்களால் திட்டமிட்ட வகையிலே அழிக்கப்படுகின்றது.

இந் நிலை நீடிக்குமனால் இன்று சிறுபான்மை இனமாக அடையாளப்படுத்தப்படும் தமிழர் நாளை ஒரு சிறு பான்மை சமூகமாக அடையாளப்படுத்தபடுவார்கள். நாளை அந்த சிறுபான்மை சமூகமும் இல்லாது இலங்கைத்தீவு தனி சிங்கள தீவாக மாற்றம் பெறலாம் அதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் இலங்கையின் ஆட்சியாளர்களினாலும் அதன் ஏவல் படைகளாலும் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

தழிழன் திரும்பும் திசைகள் எங்கும் கண்மூடிய புத்தன் கண்மூடித்தனமாக இரவோடு இரவாக அமர்த்தப்படுவது தமிழனுக்கு ஆசி வழங்க அல்ல தமிழன் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதற்கே இது ஒரு புறம் இருக்க.

பாதுகாப்பு படை என்ற பெயரிலே தழிழன் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கிய இலங்கை அரசின் இன அழிப்பு இராணுவம் தமிழர்களின் வளம் மிக்க நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து அங்கே விவசாயம்செய்கின்றது. இது ஒரு புறம் மறு புறம் தமது படை அபிவிருத்திக்காகவும் படை முகாம்களை விரிவு செய்வதற்காகவும் புதிய படை முகாங்களை அமைப்பதற்காகவும் நிலப்பறிப்பும் நில ஆக்கிரமிப்பும் செய்து கொண்டிருக்கின்றது.

போர் முடிவிற்கு வந்து ஏழு ஆண்டு ஆகியும் நல்லிணக்கம் நல்லாட்சி என்ற சொற்பதங்கள் வெறுமனே தமிழன் காதுகளில் ஒலித்தாலும் ஒருகணம் கண்களை மூடி தியானிக்கின்ற போது இனவாதப்பூதங்கள் அகலக்கால்பரப்பி தமிழன் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கொணடிருப்பது தெரிகின்றது.

இங்கே ஒரு விடயத்தினை நாம் கவனிக்க வேண்டும் தமிழர் தாயகம் முழுவதையும் இனவாதிகள் ஆக்கிரமிப்பு செய்தாலும் அதை என்றோ ஒரு நாள் தமிழன் மீட்டெடுத்து தனது தனித்துவத்தினை நிலை நாட்டுவான் என்பதற்கு சேனன் குத்திகன் என்பவர்களின் வரலாறுகள் தெளிவுபடுத்துகின்றன.

எனவே இந்த நில ஆக்கிரமிப்பு என்பது நீண்ட நாள் நிலைக்காது. ஒரு தேசத்தை ஆக்கிரமிப்பு செய்யலாமே தவிர அதை களவாடிச்செல்ல முடியாது.

ஆனால் எதிரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒரு தேசம் அதிலிருந்து விடுபட வேண்டுமேயானால் அந்த தேசத்தில் வாழும் மக்களின் தனித்துவங்களான மொழி கலை கலாச்சாரம் என்பவையெல்லாம் பேணப்பட வேண்டும்.

ஆனால் இன்று தழிழர்களை பொறுத்தவரை தமிழர்களது வரலாற்று சிறப்புகள் கலாச்சார விழுமியங்கள் என அனைத்துமே சீரழிந்து கொண்டிருக்கின்றன.

எனவே அதற்கெதிராக போராட வேண்டியவர்கள் யார் இந்த நில ஆக்கிரமிப்புக்கும் கலாச்சார திரிவு படுத்தலுக்கும் எதிராக போராட வேண்டிய பொறுப்பு யாருடையது.

ஆட்சியாளர்களுடையதா அல்லது அரசியல் தலைவர்களினதா? நிச்சயமாக இல்லை அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு சமூகம் அதிலிருந்து விடுபட வேண்டுமேயானால் அதற்கெதிராக போராட வேண்டிய பொறுப்பு மன்னர்களை விட ஒவ்வொரு சாதாரண குடிமக்களுடையதே.

இதற்கு உதாரணமாக இரண்டாயிரத்து ஒன்பது முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெறுவதற்கு முன்னர் தமிழர்கள் வன்னி பெருநில பரப்பினை இலங்கை அரச படைகளினால் நெருங்க முடியாத அளவு நீண்ட காலமாக தமது அதிகாரத்தின் கீழே நீண்ட நாட்கள் தக்க வைக்க முடிந்தது.

ஆம் இங்கே ஒரு விடயத்தினை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இன்று முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று ஏழு ஆண்டுகள் ஆகியும் தமிழர்களது அரசியல் போராட்டத்தை அதன் இலக்கினை நோக்கி நகர்த்த முடியவில்லை ஆனால் ஆயுத போராட்ட வரலாற்றில் தமிழர்கள் உலகமே வியக்கம் வகையிலே சாதித்து காட்டியுள்ளார்.

இது எவ்வாறு இனவாத இலங்கை அரசின் முப்படைகளின் முதுகெலும்பை முறித்து எவ்வாறு இந்த சிறுபான்மை சமூகத்தால் முடக்கி வைக்க முடிந்தது.

இன்றுவரை உலகம் வியக்கும் சாதனைகளை சாதாரணமாக செய்ய முடிந்தது? இங்கே வியப்படையவும் விடுகதைகள் போட வேண்டிய தேவை இல்லை பால்குடி மாறாத குழந்தைகள் முதல் பல் விழுந்த முதியவர்கள் வரை அந்த போராட்டத்தின் பங்காளிகளாக மாற்றம் பெற்றனர் ஏதோ ஒரு வகையில் அங்கே வாழ்ந்து ஒவ்வொரு தமிழரிடம் அந்த விடுதலைப் போராட்டத்தின் பங்காளிகளாய் வயது பதவி வசதி என்ற வேறுபாடுகள் இன்றி தமது பங்களிப்பை செய்தனர் எனவே தான் அவர்களால் இத்தனை சாதனைகளையும் செய்ய முடிந்தது.

ஆனால் இன்று அரசியல் ரீதியாக போராடும் போது அரசியல் போராட்ட களத்திலே பங்காளிகளாக இருக்க வேண்டிய தமிழர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே உள்ளனர். எனவே தான் போர் முடிவடைந்த ஏழு ஆண்டுகளாகியும் இதுவரை தமிழர்களால் தமக்கான உரிமைகளையோ தமக்கான நீதிகளையோ பெற்றுக் கொள்ள முடியவில்லை.

திட்டமிட்ட வகையில் அரச சிங்கள இனவாதிகளால் நில ஆக்கிரமிப்பும் அதிகாரத்தின் ஆதிக்கமும் கலாச்சார திரிவுபடுத்தலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழர் தாயகமான நயினாதீவில் 60 அடி புத்தர்சிலை முல்லைத்தீவு கரு நாட்டான் சித்தி விநாயகர் இடிக்கட்டு அதில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை சாம்பல் தீவில் புத்தர் சிலை தமிழ்ர்கள் வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வர அயற் சூழல் சிங்கள மயமாக்கப்பட்டு சிங்களவர்களின் ஆதிக்கத்தில் கீழே மாறிக்கொண்டிருக்கின்றது.

தம்புள்ளை காளி கோயில் இடிப்பு கிளிநொச்சியில் தும்பினி விகாரைக்கான காணி அபகரிப்பு இத்தோடு நின்று விடவில்லை இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயக் காணியில் சட்டவிரோதமாக புத்த விகாரை மாங்குளம் இரணைமடு சந்தி பரந்தன் கிளிநொச்சி பூனகரி கனகராயன்குளம் பெரியகுளம் கிருஸ்ணபுரம் போன்ற பகுதிகளில் அத்துமீறி புத்தர்சிலை நிறுவி தமது அதிகாரத்தை படிப்படியாக செலுத்த தொடங்கியுள்ளது.

இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் அனைத்தும் தமிழர்களுக்கும் உண்டு…

ஓடாத மானும் போராட இனமும் மீண்டெழுந்ததாத வரலாறு இல்லை. எனவே இன்று அரசியல் ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் போராட வேண்டிய காலம் இது…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com