Breaking News
Home / செய்திகள் / இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல்.

இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல்.

இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் மீது அடையாளம் தெரியாத குழுவினர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேஷியாவிற்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்த கூட்டு எதிர்க்கட்சியின் தூதுக்குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை விமான நிலையத்தில் சென்று வழி அனுப்பியதன் பின்னர் மீள திரும்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேஷியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக கடந்த சில தினங்களாக மலேஷியாவில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செல்வதற்கிருந்த விகாரையொன்றின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலை புலம்பெயர் அமைப்பினரே நடாத்தியிருக்கலாம் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, மலேஷியாவுக்கான உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமனம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com