Breaking News
Home / பாக்கள் / ஈழ பெண்களின் இன்றைய நிலை..

ஈழ பெண்களின் இன்றைய நிலை..

வீர வேங்கைகளாக வரலாறு படைத்தவள் அன்று …
விழிநீர் சுமந்தவளாய் உலா வருகிறாள் இன்று …….
தாய் மண்ணுகே பெருமை சேர்த்தவள் அன்று ….
தாய் மண்ணின் புனிதத்தை மறந்து போகிறாள் இன்று ..
பண்பாடுக் கோலமாய் காட்சி அளித்தவள் அன்று ..
நாகரீக மோகத்தால் அவலத்தில் வீழ்கிறாள் இன்று ….
சுகந்திர பறவையாய் சிறகடிதவள் அன்று …..
பகைவனின் சூழ்ச்சியால் பலியாகிறாள் இன்று ….
வீரம் விளைய தாய் பால் ஊட்டியவள் அன்று …
.ஓலைக் குடிசையில் முடங்கி கிடக்கிறாள் இன்று …..
ஈழ விடியலுக்காய் கனவுகள் சுமந்தவள் அன்று …
வலிகளை சுமந்தவளாய் மௌனித்து நிற்கிறாள் இன்று …
தாய் நாடு காக்க போராடியவள் அன்று …
தன் உயிரை காக்கவே போராடுகிறாள் வறுமையில் இன்று …….
புரட்சிப் புயலென சாதனை படைத்தவள் அன்று …..
கூடுக்கிளியாக சிறகுடைந்து கிடக்கிறாள் இன்று ….
மஞ்சள் குங்குமத்தோடு வரம் வந்தவள் அன்று ….
வரன் இழந்த வாழ்வினை வரமாக வேண்டினாள் இன்று ….
தெய்வமாக பார்த்தோம் சிறுமலர்களை அன்று …..
காமுகர் பார்வையால் கருகும் மலர்களோ பல இன்று …
கதிரவனின் நேர் கோட்டில் பயணித்தது தமிழர் வாழ்வு அன்று …
மேய்ப்பன் இல்லாத மந்தைகளாக திசை மாறி போனது இன்று ..

சுவேதா

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com