Breaking News
Home / புலனாய்வு / வல்லவனும் கோபியும்…

வல்லவனும் கோபியும்…

கடந்த 20.03.2016 அன்று, பிரான்ஸ்-பொமினி மைதானத்தில் நடந்த சம்பவங்களைத் தங்களது கற்பனை வளத்திற்கு ஏற்றவாறு பலரும் செய்திகளாகவோ, முகநூல்பக்கங்களிலோ திரிவு படுத்தி கூறிவருகின்றார்கள். ஆனாலும் அந்தச் சம்பவத்தின் உண்மை நிலையை நாம் ஏற்கனவே உங்களுக்கு அறியத் தந்திருக்கின்றோம்.

gopy-and vallavan
அந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் திரு கண்ணன் அவர்களின் வாகனம் எரியூட்டப்பட்டதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். அந்த எரியூட்டலுக்குக் காரணமானவர்களை நாங்கள் அடையாளம் காட்டி செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த கோபி – வல்லவன் குழுவினர், திரு கண்ணனின் அயலவர் வீடு ஒன்றிற்கு சென்று, நாம் வெளியிட்ட செய்தியைக் காட்டி விசாரித்துள்ளார்கள். இச் செயலானது தங்களுக்கு எதிராக எவரும் சாட்சி சொல்லிவிடக் கூடாது என்னும் வகையில் அமைந்துள்ளது.

அத்தோடு நின்று விடாது இவர்களும் இவர்களைச் சார்ந்தவர்களும் முகநூல் வாயிலாக பல தரப்பட்ட பொய்ச் பிரச்சாரங்களை பரப்பி வருகின்றார்கள். இவர்களது இச்செயற்பாடுகள் இவர்களை அடையாளம் காட்டி நிற்கின்றன. ஏனெனில் எரியூட்டிய சம்பவத்தை நேரில் யார் பார்த்தார்கள் என்பது அந்த சம்பவ இடத்தில் நின்றவர்களுக்கு மாத்திரமே தெரிந்திருக்கும். அவ்வாறு இருக்கையில், எரியூட்டியவர்களை அடையாளம் கண்ட அயலவர் யார் என்பது அந்த எரியூட்டியவர்களுக்கு தானே தெரிந்திருக்கும். கோபி – வல்லவன் குழுவினர் சரியாக அந்த அயலவர் வீட்டிற்குச் சென்று விசாரித்துள்ளார்கள் எனில் அந்த வாகனத்தை எரியூட்டியவர்கள் இவர்கள் தானே?

(இந்ந செய்தியை பார்த்தவுடன் மீண்டும் எமது செய்தியோடு சென்று அந்த அயலவரை இவர்கள் மிரட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை)
இதில் வல்லவன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் ’24 மணித்தியாலத்தில் பிரான்சில் ஈழம் எடுக்க புறப்பட்டவர்கள்” என்ற சொற்பதத்தை பாவித்துள்ளார். அப்படியானால் அவர்களும் ஈழத்துக்காகத் தான் போராடுகிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறாரா ?

gopi
அல்லது 24 மணியை குறிப்பிட்டது அவர்களின் வேகத்தை எடுத்துக்காட்டுவதாகவுள்ளது என்பதையாவது ஒத்துக்கொள்வாரா?
24 மணித்தியாலத்தில் எத்தனையோ விடயங்கள் நடந்தேறியுள்ள நிலையில் இந்த கால எல்லைக்குள் எதையும் சாத்தியமாக்க முடியும் என்பதை இவர் அறியாதவர் போலும்.

அடுத்து ‘போராளிக்கு பிரான்சி;ல் என்ன வேலை என்று மக்கள் கேட்கிறார்கள். இங்கு மனித நேய செயற்பாட்டாளர்கள் தான் தேவை” எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு போராளியை விட வேறு எவரால் மனித நேயத்துடன் மக்களுக்காக சேவையாற்ற முடியும். போராளி என்பவனை இவர் எவ்வாறு நோக்குகின்றார் என்பது இங்கு கேள்வி. தாயகத்தில் எதிரி போர் தொடுத்தான். அதனால் போராளி ஆயுதமேந்தி போராடினான். 2009 ல் ஆயுதங்களை புலிகள் மௌனித்ததை இவர் அறியாதவரா? 2009 க்கு பின்னர் போராட்டம் புலம் பெயர் தேசத்திற்கு நகர்த்தப்பட்டது. போராளி என்பவன் இன்று புலம் பெயர் தேசத்து களங்களில் நிற்கின்றான். போராளிகள் தாயகத்தில் மட்டும் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் அப்போது தான் அவர்களின் பெயர்களை சொல்லி மக்களை ஏமாற்றி தங்கள் இருப்புக்களையும் பொருளாதார வளங்களையும் பலப்படுத்தி கொள்ள முடியும் என்பதாலா?
vallavan-fb-news

‘ஈழத்தில் நாளாந்தம் மக்களைஅழித்துக்கொண்டிருக்கிறான் சிங்களவன்” என்று சொல்லும் போது சிங்களவன் அழிப்பது ஒரு புறம் இருக்க தமிழர்கள் வாழ்வதற்கு இந்த புலம்பெயர் கட்டமைப்புக்கள் என்ன வழி செய்துள்ளன என்று எவராலும் சொல்ல முடியுமா? முன்னாள் போராளிகளின் சாவுகள் தற்கொலைகள் நாள்தோறும் நடந்தவண்ணம் தானே உள்ளன? மாவீரர்களின் பெற்றோர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக அல்லல் படுகின்றார்கள்தானே? ”பிரான்சில் புலிக்கொடி பிடிக்கும் தமிழர்களை அழிக்க இந்த அணிக்கு சொல்லிக்கொடுப்பவர் யார்” என்று கேள்வி கேட்கும் வல்லவன் அப்படி புலிக் கொடி பிடித்ததால் அழிக்கப்பட்ட ஒரு தமிழரை அடையாளம் காட்டுவாரா?

இறுதியாக ஒருவரின் வழிநடத்தலில் தான் எல்லாம் நடப்பதாகவும் பிரான்சில் தேசியத்தை நேசிக்கும் தமிழர்களை அழிக்க பணம் கொடுக்கும் நபர்கள் யார் யார் என விரைவில் வெளிவரும் எனவும் சொல்லியிருக்கும் வல்லவனிடம் அவர் கூறுபவைகளுக்குரிய ஏதாவது ஒரு ஆதாரம் இருக்கின்றதா?

அப்படி அந்த ஒருவர் தான் காரணம் எனில் அவரை மக்கள் முன்னிலையில் ஆதாரத்தோடு அடையாளப்படுத்திவிட்டால் அனைத்துக்கும் முடிவு கட்டி விடலாமே?
அதைவிட அந்த ஒரே ஒரு மனிதரை விடுதலைப்புலிகள் தாங்கள் தான் எனக் கூறும் வல்லவன் அணியினரால் எதுவும் செய்யமுடியாமல் இருப்பது ஏன்?

vallavan
‘பிரான்சில் தேசியத்தை நேசிக்கும் தமிழர்களை அழிக்க பணம் கொடுக்கும் நபர்கள்” இது நகைப்புக்குரிய விடயம் ஏனெனில் தேசியத்தை நேசிக்கும் மக்கள் என்று பார்த்தால் எத்தனை ஆயிரம் பேரை அழிக்க வேண்டி வரும் ! ஏதோ இவர்கள் ஒரு சிலரே தேசியத்தை நேசிப்பவர்கள் எனச் சொல்ல வருகின்றாரா வல்லவன்?

கோபி என்பவர் தனது சகோதரர் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் துணைப்பொறுப்பாளராக இருக்கும் காரணத்தால் நடைபெறுகின்ற அனைத்து சந்திப்புக்களிலும் நிகழ்வுகளிலும் இலவச இணைப்பாக சமூகமளிக்கின்றார். இவர் பாதுகாப்பு அளிப்பார் என்ற நம்பிக்கையில் இவரை அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன் நிறுத்தி வைக்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் எப்போது தான் யதார்த்த்ததை விளங்கி கொள்ள போகின்றார்களோ?

எல்லாவற்றிற்கும் மேலாக தற்போது பொமினி மைதானத்தில் தங்களை தாக்கியவர்களை திரும்ப தாக்குவதற்காக பல வன்முறைக் குழுக்களிடம் தொலைபேசிகளிலும், நேரிடையாகவும் உதவிகளை,வல்லவனும், கோபியும் உதவி கோரியுள்ளார்கள்.

இந்த விடயத்தை புரிந்து கொண்ட சிலர் இதில் பங்கெடுக்கவிரும்பவில்லை என தெரிவித்துள்ளார். ஆதலால் இனிவரும் காலங்களில் ஈழமுரசு பத்திரிகையில் இவர்கள் “நாயகனையும் அவரை சார்ந்தோரையும் தாக்குவதற்கு ஆட்கள் தேவை” என விளம்பரம செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com