Breaking News
Home / புலனாய்வு / தொடர் வன்முறையில் ஈடுபடுகின்றார்களா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர்.

தொடர் வன்முறையில் ஈடுபடுகின்றார்களா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர்.

கடந்த 20.03.2016 அன்று, தமிழர் விளையாட்டுத்துறையினருக்கும் மற்றும் முன்னாள் போராளிகள் பலருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல், வன்முறையில் முடிந்ததை நீங்கள் எமது செய்தியில் அறிந்திருக்க முடியும்.அன்று அங்கு தாக்குதலில் ஈடுபட்ட வல்லவன் மற்றும் கோபி ஆகியோர், அன்று இரவே மீண்டும் ஒரு இழி செயலை செய்துள்ளார்கள் என்பதை இப்போது அறிய முடிகின்றது.

சங்கதி இணையத்தளத்தில் வெளிவந்த ‘இவர்களை மோசமாக தாக்கிய இந்த கும்பலின் வன்முறையாளன் ஒருவன் சற்று முன்னதாக பிரான்சு காவல்துறையினரால் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்” என்ற செய்தியில் சம்மந்தப்பட்ட நபரான முன்னாள் போராளி திரு கண்ணன் அவர்களின் மகிழுந்து அன்று இரவே அவரது இல்லத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது நள்ளிரவு தீ வைக்கப்பட்டு நாசமாக்கப்பட்டது. இச்சம்பவம் முற்றுமுழுதான ஒரு பழி தீர்க்கும் நோக்குடன் நன்றாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.sankathi1.jpg.
trafic
வாகனத்தின் வலப்பக்கத்தின் பின் சக்கரப்பகுதியில் தீயினை மூட்டிவிட்டு தப்பிச் சென்றபோது அயலவர்களால் வந்தவர்களின் வாகன தகட்டு இலக்கத்தை குறிப்பெடுத்ததோடு அங்கு தீ மூட்டியவரின் அடையாளத்தையும் கண்டு கொண்டார்கள். சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறை மற்றும் தீயணைப்புப் பிரிவினர் அனைத்த விடயங்களையும் பதிவு செய்து சென்றனர்;. மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

feu
திரு கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டு 3மணி நேரத்தில் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டபோதிலும், “மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன” என பொய்யான செய்திகளை பரப்பியதோடு, திரு கண்ணன் அவர்கள் அவரது இல்லத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார் என்ற செய்தியையும் சங்கதி இணையத்தளம் செய்தியில் கூறியிருந்தது. இதில் திரு கண்ணன் அவர்களின் வதிவிடத்தினை இந்த பொய்யான செய்திகளை பரப்பியவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என்பது இவர்களின் செய்தியூடாகவே புலப்படுகின்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் செயற்படும் வல்லவன்,கோபி போன்ற வன்முறையாளர்களே இதைச் செய்தார்கள் என்பது நம்பிக்கையான தகவல்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதே சமயம் இந்த வல்லவன்-கோபி குழுவினர் ,கடந்த டிசம்பர் 31ம் திகதி அனைத்துலகத் தொடர்பக பொறுப்பாளரான திரு நாயகன் அவர்களை, லாச்சப்பல் பகுதியில் சந்திப்புக்கு ஒன்றுக்கு வருமாறு அழைக்கப்பட்டு, அங்கு காத்திருந்த வன்முறை குழுவினருடன் இணைந்து இரும்பு கம்பிகள் கொண்டு தாக்க மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒற்றுமையாக இந்த தமிழ்ச் சமூகம் வாழ்வதற்கு முயற்சி செய்யும் போராளிகளைச் சிங்களக் கைகூலிகள் என்றும், 2009ம் ஆண்டுக்கு பின்னர் புலத்தில் அகதி தஞ்சம் புகுந்தவர்களை 1996ம் ஆண்டு நடந்த கொலைச்சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி இவர்களை சட்டத்தில் சிக்கவைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் நிர்வாகங்களில் இருக்கும் ஒரு சிறிய குழுவினரால் மேற்கொள்ளப் படுகின்ற அத்தனை செயற்பாடுகளும் எம்மினத்தை அழிவுப்பாதையில் இட்டுச்செல்கின்றது.

எனவே பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தங்களின் வருவாய் மற்றும் பதவிகளுக்காகத் தொடர்ந்தும் வன்முறைகளை வளர்க்காது ,போரளிகளை மதித்து அவர்களுடன் கலந்தாலோசித்த செயற்படுவது இன்றைய காலத்தின் தேவை.

பிரான்சில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர்களாக தற்போது திரு மகேஸ் என்பவர் இருக்க, குட்டி அல்லது விடுதலை (டென்மார்க்), சச்சி, பார்த்தீபன் என பலர் இணைந்து தற்போது தனிப்பட்ட நபர்களுடனான சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதில் திரு விடுதலை என்பவர் 2009ம் ஆண்டில் பிரான்சில் நடைபெற்று கொண்டிருந்த ஆர்பாட்ட காலங்களில் அன்றைய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளராக இருந்தார். இவரால் றிப்பிப்ளிக் என்னும் இடத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது.

அந்த சம்பவம் இவரது உத்தரவின் பேரிலேயே நடந்தேறியது. அச்சம்பவத்துடன் அந்த இடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிரெஞ்சு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்தது என்பதுடன் பிரான்சு காவல்துறையால் இவர் இனம்காணப்பட்டு பிரான்சு நாட்டுக்கு வருவதற்கு இவருக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதே போல தற்போது மீண்டும் பிரான்சில் தங்கியுள்ள திரு விடுதலைக்கு, நடைபெறும் வன்முறைகளும் தீவைப்புக்களும் புதியது அல்ல என்பதை நாமும் அறியாமல் அல்ல

ஆனால் முன்னாள் போராளிகளிடமோ அல்லது இவர்கள் சித்தரிக்கும் சிங்களக் கைக்கூலிகளிடமோ நேரிடையாக பேசாமல்,நள்ளிரவில் வாகனங்களுக்கு தீமூட்டியோ, ஊடக தர்மமற்ற முறையில் பொய்ச் செய்திகளை பரப்பியோ எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைப்பக்போவதில்லை.

இதில் வேடிக்கை என்னவெனில் திரு கண்ணன் அவர்களுக்கு அவருடைய வாகன காப்புறுதி நிறுவனம் அவருக்கு உரிய இழப்பீட்டை வழங்குவதனால் இவர்கள் அவருக்கு எதிராக மேற்கொண்ட இந்த சிறுபிள்ளைத்தனமான செயலில் எதை சாதித்துள்ளார்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவார்களா?

இந்த சிறு அறிவு கூட இல்லாத இவர்களின் செயல்கள் “சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” என்பது போலவே உள்ளது.
எனவே இச் செயலை செய்தவர்களுக்கு திரு கண்ணன் மனமார நன்றிகளைத் தெரிவிப்பார் என நம்ப வேண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com