Breaking News
Home / புலனாய்வு / பாரிசில் நடந்தது என்ன ? நடப்பது என்ன ?

பாரிசில் நடந்தது என்ன ? நடப்பது என்ன ?

பிரான்ஸ் நாட்டில் கடந்த காலங்களாக தொடர்ந்துவரும் அனைத்து சம்பவங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் மாத்திரமே.

மே 2009 க்கு பின்னரான காலப்பகுதியில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பது அனைத்து நேர்மையான செயற்பாட்டாளர்களுக்கும் பொது மக்களுக்கும் நன்றாக தெரிந்த ஒரு விடயம்.

ஒரு சிறிய குழுவினர் மாத்திரம் இந்த நிர்வாகத்தைத் தவறான பாதையில் இட்டுச்சென்று கொண்டிருக்கிறார்கள். அதை தெரிந்தும் கண்டுகொள்ளாது பலர் இருப்பது தான் வேதனையான விடயம். ஆனாலும் இந்தத் தவறை சிலர் சுட்டிக்காட்டி, நியாயம் கேட்க விளைந்தது தான் தற்போது தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரது பெரும் தலையிடியாக மாறியுள்ளது.

கடந்த காலங்களில் நான்கு சுவர்களுக்குள்ளும் தனிமையிலும் கேட்டகப்பட்டுக்கொண்டிருந்த நீதி, அண்மைக்காலமாக மக்கள் முன்னிலையில் வர ஆரம்பித்துள்ளது.

பிரான்ஸ் விiளாட்டுத்துறையைப் பொறுத்த மட்டில், அதன் பொறுப்பாளராக இருந்த திரு.சுதர்சன் மற்றும் முன்னாள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளராக இருந்த திரு பரமலிங்கம் ஆகியோர் முன்னிலையில், அனைத்து உதைபந்தாட்ட விளையாட்டுக்கழகங்களும் பங்குகொண்டு, உதைபந்தாட்ட சம்மேளத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான தலைவராக திரு சுரேஸ் என்பவரை வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தர்கள்.

திரு சுரேஸ் தலைமையிலான சம்மேளனத்தின் புதிய நிர்வாகம், இரண்டு அணிகளாக இருக்கும் போராளிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நின்று தங்களை அழைக்கும்வரை தாங்கள் எந்த தரப்பினருடனும் இணைந்துவிளையாட வரப்போவதில்லை என்று கூறியதை அடுத்து, சம்மேளனத்தலைவர் தேர்வின் போது போட்டியிட்டு தோல்வியை தழுவிய திரு நந்தன் என்பவரை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, திரு சுரேஸ் அவர்களுக்கு எதிராக சம்மேளனத்தின் புதிய பொறுப்பாளராக திரு நந்தனை அறிவித்து, சம்மேளனத்தின் கீழ் ஒன்றாக நின்ற விளையாட்டுக்கழகங்களை இரண்டாகப் பிரித்து, உதைபந்தாட்ட போட்டிகளுக்கான குலுக்கலை(றோ) கடந்த 13.03.2016 அன்று காலையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் திரு சுதர்சன், தனது தலமையில் அனைத்து முக்கியமான செயற்பாட்டாளர்களுடன் நடாத்தினார்.

இந் நிகழ்வுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றிற்கு முன்னாள் போராளிகள் அனுமதி கேட்டும், அவ்வாறான சந்திப்பு எதையும் மேற்கொள்ளாது தங்கள் முடிவில் தீர்க்கமாக இருந்து, குலுக்கல் நடந்த தினம் காலையில் அலுவலகத்திற்கு சென்ற போராளிகளோடு அநாகரிகமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடாவடியாக வெளியில் தள்ளி பிரெஞ்சு காவல் துறையினரை அழைத்து அனைத்து போராளிகளையும் வெளியேற்றினார்கள்.

உள்ளே சென்ற போராளிகளில் மூவர் பெண்கள் என்பதும், அவர்கள் விழுப்புண் அடைந்து இன்றுவரை அவர்களால் இயல்பு வாழ்கை முறையை முன்னெடுக்கமுடியாதுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அதே நாள் மாலையில் லா கூர்நெவ் எனும் இடத்தில் கிறிக்கெட் விளையாட்டு கழகங்களின் ஒன்றுகூடலில் திரு சுதர்சன், திரு மகேஸ் (தற்போதைய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர்) ஆகியோர் கலந்து கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த கழகங்கள் வெளியில் நிற்கும் போராளிகள் செயற்பாட்டாளர்களை உள்ளே வருமாறு அழைத்த பின்னர் அந்த சந்திப்பில் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

அந்த சந்திப்பில் கேட்கப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் சுதர்சனாலோ மகேசாலோ சரியான பதில்களை அளிக்க முடியவில்லை. இரு தரப்பினரையும் ஒரு சந்திப்புக்கு அழைத்து பேச வையுங்கள் என்று கழகங்கள் கேட்டதற்கு, தனக்கு பொறுப்பு மகேஸ் தான் என்றும், அந்த சந்திப்பை ஏற்பாடு செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும் சுதர்சன் தெரிவித்தார்.

அங்கிருந்த மகேஸ் தனக்கு தன்னை வழிநடத்துபவர்களின் தொடர்பு இலக்கம் தெரியாது என கையை விரித்தார். அங்கிருந்த கழகங்கள் இரு தரப்பினரும் ஒரே இடத்தில் இருந்து கதைத்து ஒரு முடிவுடன் வாருங்கள் அதுவரை தாங்கள் நடுநிலையாக இயங்குகின்றோம் எனச் சொல்லி சந்திப்பை நிறைவு செய்தார்கள்.

இதில் என்ன வேடிக்கை எனில், காலையில் நடந்த சம்பவத்தில் பிரெஞ்சு காவல்துறையினருக்கு பிரெஞ்சு மொழியில் விளக்கங்கள் அளிக்க அந்த இடத்துக்கு சென்ற ஒரு பெண் அளித்த விளக்கங்களை கேட்ட காவல்துறையினர் இந்த நிர்வாகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி ஆலோசனை கூறி விட்டு அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டார்கள்.

அவர்கள் சென்ற பின்பு திரு நாயகன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுஅலுவலகத்திற்கு கெவின் என்பவருடன் சென்று அங்கு நடந்த சம்பவம் முறை அற்றது எனவும், 2016ம் ஆண்டுக்குரிய சம்மேளன தலைவர் திரு சுரேஸ் தான் எனவும், விளையாட்டுப் போட்டிகள் திரு சுரேஸ் தலைமையில் தான் நடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி விட்டு வந்துள்ளார்.

காலையில் நடந்தது போன்று மாலையிலும் கிறிக்கெட் சந்திப்பில் காவல்துறையை அழைத்து தங்கள் காரியத்தை சாதிக்க நினைப்பார்கள் என எண்ணி போராளிகளோடு காலையில் மொழிபெயர்ப்புக்காக வந்த அந்த பெண் அந்த சந்திப்புக்கு சென்றிருந்தார். அங்கு கழகங்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொண்டதால் போராளிகளுக்கோ அல்லது வேறு எவருக்குமோ அங்கு எந்தவித இழிவுநிலையும் ஏற்படவில்லை. திரு சுதர்சன் அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது கை கட்டி தலை குனிந்து நின்றார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து தனது முகநூலில் திரு சுதர்சன் ஒரு பதிவினை பகிர்ந்ததனை காண முடிந்தது (படத்தினைப் பார்க்கவும்).

text
இந்த பகிர்வினை பார்த்த நாள் முதலாக அந்த நான்கு பெண்களும் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள். அவரை லாச்சப்பல் தெருக்களில் நேரில் சந்திக்க முடியதா என ஆவலோடு எதிர்பார்த்தார்கள். இந்த நிலையில் தான் இன்று 20.03.2016 உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெறுவதை தெரிந்ததும், அங்கு போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னரே காலை 7.30 மணியிலிருந்து விளையாட்டு மைதானத்தில் போராளிகளுடன் அவர்களில் மூவர் காத்திருந்தார்கள்.

திரு சுதர்சன் அவ்விடத்திற்கு வந்தவுடன் மொழிபெயர்ப்புக்காக வந்த பெண் தனது கையில் இருந்த அந்த முகநூல் பதிவை காட்டி எதற்காக அதை பகிர்வு செய்தார் என விளக்கம் கேட்டார். அப்படி எவ்வளவு பணம் வாங்கினோம் என்பதை கூறும்படியும் கேட்டார். அதற்கு அந்த பதிவை செய்தவரை போய் கேட்கும்படி திரு சுதர்சன் கூறினார். அந்த பதிவில் இருப்பது சரி என்று நினைத்ததால் தானே அதை பகிர்வு செய்தீர்கள், பிழையான செய்தியை யாரும் பகிர்வு செய்ய மாட்டார்கள் தானே என அந்த பெண் வினாவினார்.

அப்போது அங்கு அவரை கதைக்க விடாது நிறைய ஆண்கள் முன் வந்து நின்றார்கள். திரு சுதர்சன் பின் நோக்கி செல்ல ஆரம்பித்த போது அவரை அந்த பெண் எட்டி பிடித்தபோது அவரது கை திரு சுதர்சன் கழுத்தில் பட்டது. அதே நேரம் அங்கிருந்த இன்னொரு பெண் போராளியை அங்கிருந்தவர்கள் தள்ளிய போது அவர் தனது கையில் இருந்த குடையால் திரு சுதர்சனை அடித்தார். இதைவிட அங்கு எந்தவிதமான வன்முறை தாக்குதலும் திரு சுதர்சன் மீது நடத்தப்படவில்லை என்பது உண்மையான விடயம்.

அந்த இடத்திற்கு அவசர முதலுதவி பிரிவினரையும் காவல்துறையினரையும் அழைத்து மிகவும் பிரயத்தனம் செய்ததன் விளைவாக அந்த இரு பெண்களையும் காவல்துறையினர் கையில் விலங்கிட்டு அழைத்துச் சென்றனர். அதற்கு முன்னராகவே திரு சுதர்சன் அவ்விடத்தில் இருந்து முதலுதவி பிரிவினரால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காவல் நிலையத்திற்கு சென்ற ஓரிரு மணித்தியாலத்தில் நடந்ததை கேட்டறிந்த காவல் துறையினர் அவ்விரு பெண்களையும் உடனே விடுவித்து விட்டார்கள்.

இந்த சம்பவம் மட்டும்தான் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
அதைத் தொடர்ந்து அங்கு என்ன நடந்தது என்பதையும் பதிவு,சங்கதி போன்ற ஊடகங்களில் வந்த செய்திகளின் உண்மை தன்மையையும் பற்றியும் இனி விரிவாக பார்ப்போம்.

இந்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கையில் விலங்கிட்டு அழைத்துச் சென்றதை அவதானித்த முன்னாள் போராளிகள் மற்றும் விளையாட்டுக்கழகத்தினர் பலர், அங்கு சமூகம் அளித்திருந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளாகள்; (திரு மகேஸ், திரு சுரேஸ்), மற்றும் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் இருக்கும் கோபி,வல்லவன், பொன்டி பிரபா, அன்ரனிதாஸ், என 20க்கும் மேற்பட்டோர் நின்ற நிலையில் அங்கு காவல்துறையால் அழைத்து செல்லப்படும் இந்த இரண்டு பெண்களையும் உடனடியாக விடுதலை செய்யவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு, செய்யும் தவறுகளை தட்டிக்கேட்டால் காவல்துறையையா அழைப்பது என கேள்வி கேட்டார்கள்.

அதே நேரம் திரு நாயகன், தாயகத்தில் கூட எமது பெண்கள் மீது இப்படி விலங்கிட்டு அழைத்து செல்லும் நடைமுறை இல்லையென்றும் எமக்குள் இப்படியான வன்முறைகளை இந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள சிலரே திணிக்கின்றார்கள் எனவும் கூறினார்.

அதே நேரம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பில் உள்ள திரு மகேஸ் எந்தவொரு பதிலும் கூறவில்லை. அவருக்கு பதிலாக, திரு சுரேஸ் மாத்திரமே தங்கள் செயலை நியாயப்படுத்திக்கொண்டிருந்தார்.அதுமட்டுமல்லாது முன்னாள் போராளிகளை வசை பாடினார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் காவல்துறையினர், அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றி விளையாட்டு மைதானத்தை மூடுமாறு பணித்தார்கள்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அனைவரையும் காவல் துறையினர் வேறு ஒரு பாதையில் வெளியேற்றியபோதும், ஏற்கனவே இவர்களால் தொலைபேசியில் அழைக்கப்பட்ட வன்முறைக்குழுவினரான பிட்டுகடை Jothi  மற்றும் ஆனந்தன் இன்னும் சிலர் மற்றய பகுதி வழியாக முன்னாள் போராளிகள் நின்ற இடத்தில் தங்களின் வாகனத்தில் வந்து திரு ஐhதி அவர்கள் போராளிகளை பார்த்து நீங்கள் தொடர்ந்து இங்கு குழப்பம் செய்கின்றீர்கள் என எச்சரித்தபோது அங்கு மீண்டும் கைகலப்பு எற்பட்டு Jothi மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவர் வெளியேறினார்.

சற்று நேரத்தில் 3 நபர்கள் ஒரு வாகனத்தில் செல்லும்போது இடைமறித்த தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரை சார்ந்த வல்லவன்,கோபி,சுரேஸ்,பொன்டி பிரபா,கிருபா, அன்ரனிதாஸ் என பலர் அந்த இடத்தில் மீண்டும் தாக்குதலை செய்ய முயற்சி செய்தபோது சுதாரித்துக்கொண்ட போராளிகள் தங்களின் கைகளில் கிடைத்த பொருட்களால் தங்களை தாக்க வந்தவர்களை திருப்பி தாக்கினார்கள். அது பொபினி மருத்துவமனையின் வாசல். அந்த இடத்தில் பல கமராக்கள் பொருத்தியிருப்பது தெரிந்து சட்டத்தின் கையில் முன்னாள் போராளிகளை வன்முறையாளர்களாக சிக்க வைக்க முயற்சி செய்தார்கள்.

சற்று நேரத்தில் அந்த இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம், அடிவாங்கி, தப்பி ஒடிய, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் குண்டர்கள் ஒரு வாகன இலக்கத்தையும் மேலும் சில தகவல்களையும் கொடுத்தார்கள். அதன் அடிப்படையில் முன்னாள் போராளி ஒருவரை கைது செய்து 3மணி நேரத்திற்குள் கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டின் உண்மைநிலையை தெரிந்து கொண்டு காவல்துறையினர் அவரை விடுதலை செய்தனர்.

மொத்தத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் தங்களின் ஊடகமான ஆதித்தனின் சங்கதி வாகீசனின் பதிவு மற்றும் தமிழகத்தில் உள்ள கண்ணன் என்பவரின் வலைத்தளம் ஊடாக தங்களின் வழமையான “சிங்களக் கைக்கூலிகளின் தாக்குதல்” என்ற தொடர் நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்கள்.

இதில் உள்ள உண்மை என்னவெனில், ஒற்றுமையை விரும்பாது, தங்களது சுய இலாப நோக்கங்களுக்காகவும் பதவிகளுக்காகவும் தேசிய கட்டமைப்புக்களை கையகப்படுத்தி சில ஊடகங்கள் வாயிலாக பொய் செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றார்கள்.

இவர்களின்இ செய்திகள் எந்த அளவிற்கு பொய்யானவை என்பதற்கான ஆதாரங்கள் சில :

1) ’21 கழகங்கள் பங்கு பற்றி நடைபெற்றுக்கொண்டிருந்த”
– 21 கழகங்கள் இவர்களுடன் இல்லை
– எந்த விளையாட்டுக்களும் அங்கு ஆரம்பிக்கப்படவில்லை

2) “பிரான்ஸ் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் இந்த வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு “
– இவரை இரண்டு பெண்கள் கையால் அடித்ததை தவிர வேறு எதுவும் நடக்கவில்லை

3) “மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன”
– கைது செய்யப்பட்ட அனைவரும் 3 மணி நேரத்திற்குள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

4) “26.10.1996 ல் இருந்து இந்த நாசகார சக்திகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றார்கள்”

– இந்த கூற்றின்படி 1996ல் நடந்த கொலைகளுக்கும் போராளிகள் தான் காரணம் என சொல்ல வருகின்றார்கள். அப்படியெனில் இவர்களுக்கு தெரிந்த இந்த விடயம் எப்படி விடுதலைப்புலி அமைப்புக்கு தெரியாமல் போனது? இதை இவர்கள் தெரிந்து கொண்டிருந்தால் ஏன் மறைத்தார்கள்? ஏனெனில் இன்று நியாயம் கேட்கும் இந்த போராளிகள் தான் 2009 வரை களத்தில் நின்றார்கள்.

5) அச்சுறுத்தல்கள் குறித்த தகவலை மக்கள் அறியாவண்ணம் இருப்பதற்காகவே ஈழமுரசு பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் ஆயுத முனையில் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளானார்”

– இங்கு சொல்லப்படும் நபரான திரு ஆதித்தன் ஒரு மூத்த ஊடகவியலாளர் அல்ல. அந்த பத்திரிகை நிர்வாகி மாத்திரமே. தேசியத்திற்காக உருவாக்கப்பட்ட பத்திரிகையை தனது சுய விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ற வகையில் தனிமனிதர்கள் மீது அவதூறான செய்திகளை பிரசுரித்தமையே அச்சம்பவத்திற்காக காரணம் என்பது உண்மை.

ஆகமொத்தத்தில் இதுவரை காலமும் எமது மக்களின் விடிவுக்காக இந்த நிர்வாகங்கள் எதுவும் செய்யவில்லை என்பதோடு சிங்கள பேரினவாத அரசின் போக்கிற்கு ஏற்ப புலம்பெயர் மக்களின் எழுச்சியை மழுங்கடித்து, புலம்பெயர் தேசத்திடம் ஒப்படைக்கப்பட்ட போராட்டத்தை இல்லாதொழிப்பதே இவர்களின் இலக்காகவுள்ளது என்பது மட்டும் திண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com