Breaking News
Home / புலனாய்வு / வன்னிமயில்,சலங்கை என்ற நிகழ்வும் சண்டையும்!

வன்னிமயில்,சலங்கை என்ற நிகழ்வும் சண்டையும்!

கடந்த 27ம் திகதி பிரான்சில் நடந்த இளையோர் அமைப்பின் பனி வெளி நடனம் இந்த கட்டமைப்பு இப்போது இங்கு எந்த கட்டமைப்பின் கிழ் இயங்குகின்றது என்றால் அதன் பதிலை யார் தருவார்கள்.

வருடத்தில் 365நாளில் ஒரு நாள் மட்டும் சுவரொட்டியில் தமிழ் இளையோர் நடத்தும் பனிவெளி நடனம் என்று எழுதுவதற்காகவா தமிழீழத் தேசியத்தலைவர் இந்த இளையோர் அமைப்பை உருவாக்கினார்.

இவர்கள் செய்யும் பரப்புரை என்ன ?

இவர்களின் பின்னால் இன்று எத்தனை இளையோர் உள்ளார்கள்?

இவர்களின் வேலை திட்டம் தான் என்ன ?

இதற்கான பதில் என்ன ?

அடுத்து கடந்த மாதம் 28ம் திகதி பரிசில் நடந்த இரண்டு நிகழ்வுகள்:
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் நடத்திய வன்னிமயில் என்ற பரதநாட்டிய நிகழ்வும் அதே தினத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தால் நடத்தப்பட்ட சலங்கை என்ற பரத விழாவும் இந்த இரண்டு நிகழ்வுகளும் சொல்லும் செய்தி என்ன?

தமிழீழத் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு கட்டமைப்புக்கள் இன்று ஏன் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நிகழ்சிகளை நடத்தி மக்களின் ஒற்றுமையை குழப்புபவர்கள் யார் என்றால் அதற்கான பதிலும் ?

தலைவரால் உருவாக்கிய இந்த இரண்டு கட்டமைப்புகள் தான்!

அனால் இதில் ஒரு தெளிவு உள்ளது இந்த இரண்டு கட்டமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் எமது இயக்கத்தின் கொள்கையை சரியாக விளங்கி கொள்ளாமல் எமது மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் செயலை எதோ ஒரு விதத்தில் கச்சிதமாக செய்கின்றார்கள்.

மொத்தத்தில் இந்த இரண்டு கட்டமைப்பின் பொறுப்பாளராக இருப்பவர்கள் தான் இதற்கான பதிலை காலம் வரும்போது கூற வேண்டும் என்பதையும் இவர்கள் புரிந்து கொள்பவர்களாக இருக்க வேண்டும்.

தங்களின் வருவாய்காக இவர்கள் செய்யும் இந்த தில்லுமுல்லு விளையாட்டுக்கள் கடந்த ஏழு வருடங்களாக தான் நடக்கின்றது என்பதையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

தாயகத்தில் விடுதலைப்புலிகள் செயற்பட்ட காலத்தில் இது போன்ற செயற்பாடுகள் ஒரு நாள் கூட புலத்தில் நடந்தது இல்லை.

இதற்கு ஒரு காரணம் உண்டு:

தாயகத்தில் அமைப்பு பலமாக இருந்தது அதே நேரம் புலத்தில் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழுவானது அதே கட்டுகோப்புடன் இருந்து தங்களின் உப கட்டமைப்புகளை வழி நடத்தியமை.

இன்று அப்படி இல்லை என்பதற்கு சரியான காரணம் உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

வன்னிமயில் என்ற பிரான்சு தமிழர்ஒருங்கிணைப்பு குழு நடத்தும் இந்த இளம்பெண்கள் கலந்து கொள்ளும் பரத விழாவில் 2015ம் ஆண்டும் சரி 2016ம் ஆண்டு அதவாது கடந்த 28ம் திகதி கூட மண்டபத்தில்கூடியிருந்த மக்களுக்குள் இரண்டு வன்முறை குழுவானது தங்களுக்குள் மோதிக்கொண்டு தங்களின் ஆடவாடித்தனத்தை காட்டியுள்ளார்கள்.

அதன் பின்பு அந்த இடத்திற்கு காவல்துறையினர் வந்து தங்களின் கட்டுபாட்டில் நிலையினை சரிசெய்து நிகழ்வினை நடத்த ஒத்துழைத்தனர் இந்த செயற்பாடனது ஒரு இயக்கத்தின் கட்டமைப்பு நடத்தும் நிகழ்வில் இது நடைபெறுவது என்பது முற்றிலும் தவிர்க்க பட வேண்டியது.அதே போல இது முன்பு நடைபெற்றதாக வரலாறுகள் இல்லை.

இதற்கு காரணம் யார் என்றால் அதற்கு முழுப்பொறுப்பும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு தான் என்பதை மறுக்க முடியாது.

ஒவ்வொரு நிகழ்விலும் வன்முறைகுழுவில் அங்கம் வகிக்கும் தங்களுக்கு வேண்டியவர்களை பாதுகாப்பு பொறுப்பாளராக நியமித்து அவர்களை முன்னிறுத்தி செயற்படும்போது தான் இந்த வன்முறை வெடிக்கின்றது.

2015ம் ஆண்டு வன்னிமயிலின் பாதுகாப்பில் இருந்த ஊத்தை ரவி என்பவருக்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவில் இருந்த சஞ்சீவன் என்ற நபருக்கும் எற்பட்ட தனிப்பிரச்சனையினை இவர்கள் வன்னிமயில் மண்டபத்தில் வைத்து அடிதடி,கண்ணீர்புகை என வன்முறை இடம்பெற்றது.

அதே போல 2016ம் ஆண்டும் தங்களுக்கு வேண்டியவர்கள் என்ற நிலையில் உள்ள சிலரை இணைத்து குறிப்பாக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள சுரேஸ் என்பவரின் தம்பியான கோபி என்பவரும், மதுபோதையில் திரியும் வல்லவன் என்றவரை பாதுகாப்பில் நிறுத்தியதால் இந்த முறையும் இரண்டு குழுமோதல்களில் வன்னிமயில் முடிவுற்றுள்ளது.

இந்த நிகழ்வானது சொல்லும் செய்தி என்னவென்பது எமது இயக்க கட்டமைப்பு நடத்தும் நிகழ்வில் நீங்கள் பாதுகாப்புகுழு என்ற முறையில் வன்முறைகுழுக்களை உள்வாங்கி நிறுத்தும்போது இப்படியான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதே திகதியில் நடந்த தமிழர்புனர்வாழ்வு கழக சலங்கை என்ற பரத விழாவானது எவ்வித குழப்பமும் இன்றி மண்டபம் நிறைந்த மக்களோடு நடைபெற்றதாக அறிய முடிகின்றது.

இவ் நிகழ்வில் 2009ம் ஆண்டுக்கு பின்னர் புலத்தில் வாழும் முன்னாள் போராளிகள் பலர் கலந்து கொண்டமையும் கவனிக்கதக்கவை.

அதே போல வன்னிமயில் நிகழ்வில் 2009ம் ஆண்டுக்கு பிறகு வந்த போராளிகளை உள்வாங்க மறுத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வகையான செயற்பாடனது என்பது மொத்தத்தில் இனி விடுதலைப்புலிகளின் காலம் மீண்டும் வராது என்பதை காட்டுகின்றது.
எனவே நல்ல திறமையுள்ள முன்னாள் போராளிகள் இந்த விடயத்தில் கவனம் கொண்டு எமது மக்களையும்,இளம் சந்ததியையும் தேசியம் சார்ந்து வளர்க்க கவனத்தில் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

akara122_naattiyamfrance_gnana salangai2016-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com