Breaking News
Home / புலனாய்வு / தமிழர் ஒருகிணைப்பு குழு பிரான்சு  அவசரமாக வன்னி நோக்கி பயணம்!

தமிழர் ஒருகிணைப்பு குழு பிரான்சு  அவசரமாக வன்னி நோக்கி பயணம்!

என்னடா தலையங்கம் இப்படி இருக்கே என்று ஆச்சரியப்பட வேண்டாம்

பிரான்சில்  2009ம் ஆண்டுக்கு பின்னர் எல்லாமே தலை கிழாக தான் நடக்கின்றது என்பதை மக்கள் அறிந்திருக்க வாய்பில்லை.

புலம்பெயர் கட்டமைப்புகளை பார்த்தீர்கள் ஏன்றால் மொத்தம் 3 வகையாக பிரிக்க முடியும்.

இதில் முதலாவது  ஐரோப்பா இரண்டாவது கனடா அமெரிக்கா ஆவு];ரேலியா  மற்றது ஆசியா நாடுகள்  இதில்  கனடா அமெரிக்கா என்பது யார் கேட்பார்கள் என்ற நிலையில்  அங்கு ஒரு இயங்கு சக்தி இயக்கி கொண்டுள்ளது.

அனால் ஐரோப்பாவை பார்த்தால்    குழப்பத்தின் மேல் குழப்பம் இந்த குழப்பங்களை முதலில் யார் செய்தார்கள் என்றால்  அது  தமிழர் ஒருங்கிணைப்பு குழுவையே சாரும் அதில் முன்னனியில் உள்ளது பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு.

இந்த ஒருங்கிணைப்பு குழுவின் முன்னாடி செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதை வெகு விரைவில்  தருவதற்கு முன்  கடந்தாண்டு முதல் இன்று வரை இந்த பிரான்சில் என்ன பாடுகள் நடக்கின்றது  என்பதை இப்போது பார்ப்போம்.

2013ம் ஆண்டு  அனைத்துலகத் பொறுப்பாளராக  திரு கோகுலன் அவர்கள் இருந்தார் என்பதையும் அவரை தொடர்ந்து பொறுப்பினை பெற்றுக் கொண்ட  முன்னாள் போராளியாகிய திரு நாயகன் அவர்களின்  நிர்வாகத்திற்கும்  பிரான்சு  தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கும் அன்று தொடங்கிய பனிப்போர் கடந்த  உச்சத்தை அடைத்துள்ளது என்பதை அறிய முடிகின்றது.

பிரான்சில் சில நிர்வாக மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்ட போது அனைத்துலகத்தின் பொறுப்பாளர்  என்ற முறையில் திரு நாயகன் சில மாற்றங்களை செய்தார் .

பொறுப்பு ஏற்று சில நாட்களில்  நிர்வாகத்தில்  சில ஒழுங்கு முறைகளை செய்ய வேண்டிய தேவை பிரான்சில் தான் இருந்தது.

ஐரோப்பாவின் நிர்வாக கட்டமைப்பின் இதயப்பகுதி இந்த பிரான்சில் தான் செயல்படுகின்றது என்பதையும்  நாம் மறுக்க முடியாது.

2009ம் ஆண்டுக்கு பிறகு  நன்றாக பொறுப்பு என்ற என்ற  இடத்தில் இருந்து கொழுத்தவர்களும் அந்த தியாகத்தை வைத்து தங்களை வளர்த்தவர்களும் நாயகனின் மாற்றத்தை விரும்பவில்லை.

இதற்கு பல காரணங்கள் உண்டு முதன்மை காரணம் ஒரு நல்ல நிர்வாகம் பிரான்சிலோ  சரி அல்லது ஐரோப்பாவிலோ சரி வருவதை  பொறுப்பில் உள்ளவர்களும் அதை போல சொத்துக்களின் பினாமிகளும் விரும்பவில்லை.

இதனால் பல சந்திப்புக்கள் காவல்துறையினர் பிரசன்னமாகிய படியால் ரத்து செய்யப்பட்டதும்.

இதே  போல  அனைத்துலகத் நிர்வாகத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்ற செயற்பாடுகள் பிரான்சில் மிக வேகமாக நடைபெற்ற  படியால்  இதற்கு  முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேவை   திரு நாயகன் அவர்களுக்கு ஏற்பட்டது.

அதனால் ஒவ்வொரு கட்டமைப்புகளையும் சந்தித்து உரையாடியதும் அதே போல தாயகம் நோக்கிய செயற்பாடுகள் மூலமாக எமது போராளிகள்  எம் மக்களுக்கு எம்மால் முடிந்ததை செய்ய வேண்டிய காலத்தில் நாம் உள்ளோம் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.

ஏற்கனவே பிரான்சில்  தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் நிர்வாகத்தில் நடைமுறையில் அதிருப்தி அடைந்து இருந்த விளையாட்டு கழகங்கள்  திரு நாயகன் அவர்களின் நிர்வாகத்தின் கிழ் செயற்பட முடிவெடுத்தது.

அதன்படி உதைபந்தாட்ட  கழகங்களும் கிரிகெட் கழகங்களும் தாங்கள் திரு நாயகன் அவர்களின்  நிர்வாகத்தின் கிழ் புதிய பொறுப்பாளரின்  கட்மைப்பின் கிழ் செயற்பட முடிவெடுத்தார்கள் .

அதன் படி கடந்த 07ம் திகதி  பிரான்சில் நடந்த கழக  நிர்வாக சந்திப்பில் உள் நுழைந்த தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் அங்கு  தங்களின் அடவாடித்தனத்தை நடத்தியதோடு மண்டபத்தையும் குழப்பியதோடு  .மற்றும்  கழகங்கள் தாங்களோடு தான் இணைந்து செயற்பட வேண்டும் என்பதையும்  ஒவ்வொரு கழகங்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி தங்களின் சர்வதிகார செயற்பாடுகளை முன்வைத்துள்ளார்கள்.

இந்த செயற்பாடானது தங்களை தொடர்ந்தும் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும் என்பதையும் அதே போல தங்களின் தவறுகளை தட்டி கேட்க எவரும் கூடாது என்றும் இவர்கள் நினைப்பது மட்டும் தான்.

புலத்தில் இடம்பெயர்ந்த எந்த போராளிகளையும் உள்வாங்காமல் தங்களின் நிர்வாகத்தின் தப்புகளை அனுசரித்து போகும் போராளிகளை உள்வாங்கியபடி இவர்களின் பயணம் போகுன்றது. இதில் சில போராளிகளும் பலியாகி உள்ளார்கள் என்பது தான் கவலை தரும் விடயம்.

இந்தப் பெரிய மக்கள் இயக்கம் இன்று தன்னிச்சையாக ஒரு சில பேரின் கைகளில் சிக்கி அவர்கள் சொல்லுவது தான் வேத வாக்கு என்ற நிலையில் சிலர் திரிவதை ஒருபோதும் அனுமதிக்க மடியாது.

அதே போல இந்த விடுதலைப்புலிகளின்  புலம்பெயர் கட்டமைப்பை ஒரு பொது மனிதன் வழிநடத்தவும் முடியாது.

எனெனில் தாயகத்தில் தலைமை இயங்கிய போதும் தலைமை  புலம்பெயர் பொறுப்பினை ஒரு போராளி என்ற முறையில்  நெடியவன் என்பவர் தான் வழிநடத்தினார் அதே போல அனைத்து நாட்டு  ஒருங்கிணைப்பு குழுக்களின் பொறுப்பாளர்களும் எதோ வகையில் அவர்களும் போராளியாக தான் இருந்துள்ளார்கள்.

அனால் தற்போது பொறுப்பில் உள்ளவர்கள்    அவை என்ற கட்டமைப்பை எடுத்துக்கொண்டால் அதன் தலைவரோ அல்லது சுவிஸ் கிளையின் பொறுப்பாளரோ ஒரு போராளி அல்ல எனவே அவர்கள் ஒருபோதும் களமுனையில் நின்ற தளபதிகளையோ அல்லது போராளிகளையோ வழி நடத்த முனைவது என்பதில் தான் இங்கு குழப்பம் வருகின்றது.

அதே போல 2009ம் ஆண்டுக்கு பிறகு சிறை சென்று மீண்டவர்களை நாம் உள்வாங்குவதில் பிரச்சனைகள் உள்ளது என்பதை  அடிக்கடி தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் சொல்லும் தேசிய வார்த்தை அப்படி இருக்கும்போது …..

நாம் கேட்பது ஒன்றே ஒன்று தான் ?

எப்படி இசைப்பிரியனை உள்வாங்கினீர்கள் ?
எப்படி வீரமணி என்ற போராளியை உள்வாங்கினீர்கள் ?
எப்படி புலனாய்வுத்துறை  தென்னாவை உள்வாங்கினீர்கள்  ? (இதில் தென்னா பிரான்சில் நடுவம் இயங்கிய போது  யேர்மன் இணைப்பளராக பணியாற்றியவர்)
எப்படி   சுவிசில் உள்ள சந்தோ]  அவர்களை உள்வாங்கினீர்கள் ?
எப்படி நிர்மலன் அவர்களை உள்வாங்கினீர்கள் ( தலைமைச் செயலகம் பிரித்தானியா என்ற அமைப்பில்பணியாற்றியவர்)
எப்படி அன்பரசன் அல்லது வசந்தன் அவர்களை உள்வாங்கினீர்கள் ? ( தலைமைச் செயலக  பிரித்தானியா அறிக்கைப்பிரிவு)

மொத்தத்தில் கடந்த மாவீரர் நாள் அறிக்கையில் 2015 தலைமைச் செயலகம்  என்ற தலைப்பிட்ட அறிக்கையே வெளிவந்தது  மொத்தத்தில் கடந்த 5 ஆண்டுகள் இராமு சுபன் அணி, கேபி அணி ,உருத்திரா அணி, என பல குழப்பங்களுக்கு வித்திட்ட அனைத்துலக தொடர்பகம் எந்த முறையில்  கடந்த வருடம்  தலைமைச் செயலக அணியுடன்  இணைந்து அறிக்கையை வெளியீட்டார்கள் என்பதை இப்போதவாது மக்களுக்கு அறிய தருவார்களா ?

மொத்தத்தில் இவ்வளவு குழப்பங்கள்  அறிக்கைகள்  வசைபாடுதல் என அனைத்தையும் செய்த பின்னார்  இவர்கள் இணைந்தது என்பது எந்த அடிப்படையில் என்பது  தான்  கேள்வி?

அப்படி அனைத்து போராளிகளும் ஒற்றிணைந்து வேலை செய்ய விரும்பும் போது ஏன்  ? அனைத்துலக முன்னால் பொறுப்பாளரால்  அனைத்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர்கள் முன் பொறுப்பினை பெற்றுக்கொண்ட நாயகனை எந்த அறிவித்தலுமின்றி அவருடைய வேலை திட்டங்களை புறம் தள்ளி தங்களுக்குள் ஒரு அவை என்ற கட்டமைப்பை நிறுவி அதை செயற்படுத்துவது எந்த வகையில் சாத்தியப்படும்.

மொத்தத்தில் பிரான்சில் தான்  வன்முறைகளும் குழப்பங்களும் நடைபெறுகின்ற போது?

ஏன் எதற்கு இவர்கள்  13ம் திகதியோ அல்லது அடுத்த நாளோ  அனைத்து கட்டமைப்புகளையும்  உப கட்டமைப்புகளையும்  அழைத்துக்கொண்டு சுவிஸ் புறப்பாடுகின்றார்கள் என்றால்  அங்கு  என்ன உள்ளது ?

அனைத்துலகத் பொறுப்பாளர்  திரு நாயகன் பிரான்சில் இருக்கும்போது அவரை தவிர்த்து இவர்கள் சுவிஸ்  சென்று அங்கு யாருடன் கலந்து கொள்ள போகின்றார்கள்  ?

அல்லது  அங்கு யாரை இவர்கள்  சந்தித்து என்ன சாதிக்க போகின்றார்கள் ?

மொத்தத்தில் இவர்கள் பிரச்சனை இருக்கும் இடத்தை விட்டுவிட்டு வேறு ஒரு தேசத்தில் சந்தித்தது என்ன  கதைக்க போகின்றார்கள் ?

மொத்தத்தில் அனைத்து கட்டமைப்புகளையும்  அழைத்து சென்று  சுவிசில் உள்ளவர்கள் தான் இவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும் என்றால்?பிரான்சில் உள்ள  அளுமை அற்ற பொறுப்பாளர்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறி சுவிசில் பணியாற்றுவது தான் நல்லம்.

எனவே இந்த விடுதலைப்புலிகளின் பிரான்சு கிளைக்கு  திரு நாயகன் அவர்கள் கூறுவதுபோல தங்கள் நாட்டில் நடக்கும் நிர்வாக பிரச்சனையை  சுவிசில் கொண்டு சென்று தான் தீர்க்க வேண்டும் என்றால்  பிரான்சு கிளையின் நிர்வாகத்தில் ஆளுமை அற்றவர்களால் தான் உள்ளார்கள் என்பது புலப்படுகின்றது அல்லவா ?

எனவே  சுவிஸ் போகும்  அனைத்து பொறுப்பாளர்களும்  அங்கு சென்று  ஒரு மண்டபம் எடுத்து சிரித்து கதைத்து சாப்பிட்டு விட்டு  வந்து  வழமையாக நீங்கள் செய்யும் உங்கள் சொந்த தொழிலை  சிறப்பாக   செய்ய நாமும்  வாழ்த்துகின்றோம்.

உங்கட தொழில்  குழப்பம் விளைவிப்பது தானே ………………………………. தொடர்ந்தும்

உறுதி இணையத்தளத்திற்காக

சிரித்திரன்  (பிரான்சு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com