Breaking News
Home / புலனாய்வு / மீண்டும்-ஈழமுரசும்-புலம்பெயர்-தமிழர்களும்-பாகம்-4

மீண்டும்-ஈழமுரசும்-புலம்பெயர்-தமிழர்களும்-பாகம்-4

நீண்ட இடைவெளிக்கு பின்னர்  ஈழமுரசு பற்றி பாகம் 4 இல் சந்திக்கின்றோம் கடந்த பகுதியில் அனைத்து கட்டமைப்புகளையும் விமர்சித்து வந்த ஆதித்தன் குழுவினர் மீது யாரும் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு செல்ல மறுத்தனர்.

எனெனில் இங்கு இயங்கும் கட்டமைப்புகளை வழி நடத்துவோர் எதோ ஒரு முறையில் ஆதித்தனுடன் தொடர்புகளை பேணியதை உறுதிபட எம்மால் தெரிவிக்க முடியும்.

அனால் ஆதித்தன் குழுவினர் தாங்கள் தான் எதையும் செய்யலாம் எம்மை கேட்க யாரும் இல்லை என்ற இறுமாப்புடன் செயற்பட்டார்கள்
இந்த நிலையில் தான் இவர்களின் தலையில் 19-04-2014ம் ஆண்டு இடி இறங்கியது

அன்று  தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் ஆதித்தன் அவர்கள் தனது இல்லம் திரும்பிக்கொண்டிருந்தார்
லாசப்பலில் இருந்து கண்காணித்து வந்தவர்கள் இவரது இருப்பிடத்ததை அண்மித்தபோது அங்கு ஏற்கனவே காத்து இருந்தவர்களும் இணைந்து இவருடன் ஒரு வகையான பேச்சு வார்த்தையினை செய்ய முற்பட்டபோது ஆதித்தனின் நல்ல காலம் அவர் நாம் சொன்ன பேச்சுகளின் படி நடந்து கொள்வதாக உடனே தனது வீட்டுக்குள் ஒடிவிட்டார் (எப்படியான முறையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது ஏன் அது நடைமுறையில் சாத்தியம் ஆற்று போனது என்ன நடந்தது ஏன் அப்படி நடந்தது என்பது ஆதித்தனுக்கும் அங்கு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டவருக்கும் மட்டும் தான் தெரியும்)

உடனடியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தவர்கள் ஆதித்தனின் நண்பனின் தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தி ஆதித்தன் நிர்வாகிக்கும் அனைத்து தேசிய சொத்துக்களையும்  தமிழர் ஒருகிணைப்பு குழுவிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி கொள்ளுமாறு அவருக்கு பணிக்கப்பட்டதாம்.
அதே நேரம் அனைத்து ஊடகங்களுக்கும் இந்த செய்தி துண்டறிக்கை ஊடாக அனுப்ப பட்டு இருந்தமையும் அதனை பாகம் இரண்டில் உள்ள அறிக்கையில் பார்வையிடலாம்.

எனவே அனைத்து  ஊடகங்களும் இதனை ஒரு செய்தியாக எடுத்துக்கொண்டமையும் அதே நேரம் பலவகையில் மக்களுக்கும் தேசியத்திற்கும் குந்தகம் விளைவித்த ஒரு மாபியா குழுவினை ஏற்கனவே பலர் மிரட்டி தாக்குதல் செய்த போதும் பணியாத இவர்கள் ஏன் இந்த எல்லாளன் அறிக்கைக்கு பயந்து தங்களின் செயற்பாட்டினை நிறுத்தி கொள்ளுவதாக அறிவித்தார்கள் என்ற நிலையில் பிபிசி தமிழோசைக்யின் செவ்வியில் கோபி என்பவர் இந்த மிரட்டல் தங்களுக்கு ஆபத்தானது என்பதையும் அதை தாங்கள் உணர்ந்து விலகி கொள்ளுவதாகவும் அறிவித்தார்கள்.

தங்களது இணையத்தளம் மற்றும் அனைத்தையும் மூடிவிட்டு தங்களின் சொந்த தொழிலை செய்ய இவர்கள் போவதாகவும் இருந்தார்கள்.
அதே நேரம் பிரான்சு காவல்துறையில் ஒரு வழக்கினை பதிவு செய்து தங்களுக்கு நடந்த இந்த மிரட்டலையும் கூறியிருந்தார்கள்.

ஆரம்பத்தில் இவர்களின் தனிபட்ட விடயங்களையும் இவர்கள் கூறிய மிரட்டல் விடயங்களையும் பதிவு செய்த காவல்துறை எங்கு இருந்து இந்த எல்லாளன் அறிக்கை அனுப்ப பட்டது என்ற இணைய முகவரியை கொண்டு முதல் கைது நடவடிக்கை செய்யப்பட்டது இந்த கைது தான் பிரான்சில் உள்ள திரு முரளி அவர்கள் கைது செய்யப்பட்டார் என்று  இவர்கள் பெரும் செய்தியாக இதை பரப்பினார்கள்.

இரண்டு நாள் விசாரணையின் பின்பு நீதிமன்றத்துக்கு விசாரணையினை கொடுத்துவிட்டு  திரு முரளி அவர்களை காவல்துறையினர் விடு செல்ல அனுமதித்தனர்.

அதே நேரம் ஆதித்தன் குழுவினருக்கு நீங்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவ் நபரை தடுப்புகாவலில் எடுத்து விசாரித்து இந்த சம்பவத்தில் இவரும் ஈடுபட்டார் அனால் முக்கியமானவர்களை கைது செய்ய முடியவில்லை என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக  காவல்துறையினரே முரளியிடம் தெரிவித்தது.

இவ் நடவடிக்கையில் முரளி ஈடுபட்டது தெரியவர ஆதித்தன் உடனடியாக தனக்கு தெரிந்தவர்களுக்கு தொலைபேசியிலும் நேரிலும்  சென்று தன்னை மிரட்டியது முரளி தான் என்பதையும் அவர் தான் எல்லாம் செய்தார் என்பதையும் தனது கற்பனைக்கு ஏற்றபடி உருவாக்கி தனது  படையான கஐன் இடம் தெரிவிக்க  கஐன் மெல்ல மெல்ல மூகப்புத்தகத்தில்  இவைகளை எழுதி எழுதி எதோ சாதிக்க நினைத்தார்.

அதே நேரம் கஐன் அவர்கள் தான் தோன்றி தனமாக கதைத்ததையும் பொய்யான செய்திகளை பரப்பியதையும் நாமும் அறிவோம்
மெல்ல மெல்ல நாட்கள் கடந்து நீதிமன்றத்துக்குரிய நாள் வந்தது அங்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

அன்று அந்த நீதி மன்றத்துக்கு வந்து இருந்தவர்கள் யார் யார் ?

இவர்களுக்கு ஆதித்தன் குழுவினருக்கும் என்ன தொடர்பு ?

இன்று வரை இந்த தேசியப்போராட்டத்தை சீர்குழைக்கும் நபர்கள் யார் யார் ?

இவர்கள் இணைந்து போடும் சதி திட்டம் ஏன்ன?

அடுத்த தொடரில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com