Breaking News
Home / புலனாய்வு / மீண்டும் ஈழமுரசும் புலம்பெயர் தமிழர்களும் !! பாகம் 2

மீண்டும் ஈழமுரசும் புலம்பெயர் தமிழர்களும் !! பாகம் 2

கடந்த பாகத்தில் நாம் ஈழமுரசு பத்திரிகையின் உள்வீட்டு நிலைமையினை பார்த்தோம் இனி இப்போது என்ன நடக்கின்றது என்பதை விரிவாக பார்ப்போம்.

இவர்கள் எதிர்பார்த்ததுபோல் நிதிமன்றத்தின் தீர்ப்பு அமையவில்லை. உடனே 16.02.2015 அன்று இணையத்தளங்கள்,மற்றும் மூகப்புத்தகங்களில் முரளி பற்றி இவர்கள் எழுத தொடங்கினார்கள்.

 (படமும் -1 :முதலாவது பத்திரிகை கப்டன் கஐன் அவர்களால் வெளியீட்டபோது)

புலிகளின்குரல் வானொலியின் இணைப்பளராய் 2004ம் ஆண்டில் இருந்து பணியாற்றிய முரளி அவர்களை அடையாளப்படுத்தனும் என்று எண்ணிய ஆதித்தன் குழுவினர் தங்களின் செய்தியில்  புலிகளின்குரல் முரளி என்றும் குறிப்பிட்டு  தேசிய வானொலிக்கும் களங்கத்தை விளைவிக்கும் செயலை முதலில் செய்தார்கள் ஒரு தனிமனிதர் செய்யும் செயல்களுக்கு இவர்கள் ஒரு தேசிய வானொலியின் பெயரை பயண்படுத்தியமை என்பது மன்னிக்க முடியாத குற்றமாகமென்பது உண்மை.

அதே நேரம் பதிவு இணையத்தளமும் இவர்களின் சொல்படியே நடந்துள்ளமையும், இவர்களின் வழிநடத்தலிலே பதிவு இணையமும் செயல்படுகின்றமையும் தெரியவந்துள்ளது. ஈழமுரசு பற்றிய செய்தியை பிரசுரித்தவடிவில் அதன் ஊடக தர்மத்தை தெரிந்துகொள்ள முடிகின்றது.

பதிவு பற்றியும் கொஞ்சம் பார்த்துவிட்டு போவோம்…..

ஏற்கனவே யேர்மன் கிளையின் பொறுப்பாளராய் இருந்த சண்டியன் வாகிசன் அவர்கள் பொறுப்பு வகித்த காலத்தில் பதிவு இணையத்தளம் உருவாகியது.

வாகிசன் என்பவர்  பிரான்சில் தான் தனது அகதி உரிமையினை கோரியிருந்ததார், அவரின் அகதி உரிமையின் முகவரி ஆதித்தன் வீட்டினிலே தான் பதிவாகியிருந்தது என்பது உண்மை அதனால் இன்றுவரை இவர்கள் இருவரும் நட்பாக இணைந்து இந்த தேசவிரோத செயலை செய்து வருகின்றார்கள் என்பது மட்டும் உண்மையும் மாற்று கருத்துமில்லை.

(படமும் -2: பூபாளம் என்ற அமைப்பினுடாக கட்டமைப்பு வன்னியில் இயங்கிய நிலையில் வெளிவந்த பத்திரிகை)

அதே போல் வாகிசனை யேர்மன் நாட்டு காவல்துறை கைது செய்து சிறைத்தண்டனை விதித்த காலத்தில் பதிவு இணையத்தளத்தை யேர்மன் கிளையினர் நடத்திவந்தனர், வாகிசன் அவர்கள் சிறையில் இருந்து வெளியாகிய போது தாயகத்தில் நிலைமை தலைகிழாக மாறியிருந்தது,அதே நேரம் இவர் தொடர்ந்தும் யேர்மன் கிளையின் பொறுப்பாய் இருக்க முடியாத நிலையில் பிரான்சில் தற்போது வசித்துவருகின்றார் இவர் தான் இன்று பதிவின் பிரதம நடத்துனர்.

செய்திகளை இணைப்பவர்களாக பலர் உள்ளனர் இதில் யேர்மன் சங்கர் அவர்களும் பதிவு இணையத்தளத்திற்கு செய்தி இணைப்பளராக உள்ளார் அவரிடம் ஏன் பதிவு இணையத்தளத்தில் இப்படி தனி மனித வசைபாடும் விதத்தில் செய்தி போட்டுள்ளீர்கள் என்று கேட்டமைக்கு அவரிடம் இருந்து எமக்கு கிடைத்த பதிலும் இந்த செய்தியினை அனுப்பியது ஆதித்தன் தான் என்றும் அவருடைய மின்னஞ்சலில் இருந்து தான் இந்த செய்தி அனுப்பபட்டு உள்ளது என்பதை அவர் போட்டுடைத்தார்.

அதே நேரம் சங்கர் அவர்களால் திரு சிமான் அவர்கள் பற்றிய செய்தி ஒன்று பதிவு இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டமையும் அதை மறுகணம் வாகிசன் அவர்கள் அந்த செய்தியினை நிறுத்தியமையும் இந்த செய்தியில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை வாகிசன் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

4சுவருக்குள் இருந்து ஒரு கணணியுடன் வாகிசனால் இவைகளை செய்து தேசியத்தை சிர்குலைக்கும் முடியும் என்றால் எதிர்வரும் காலத்தில் வாகிசன் நிலை என்னவாக இருக்கும் என்பதை மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

ஆக மொத்தத்தில் தொடர்ந்தும் ஆதித்தனும் கோபிராஐ; ஆகிய இருவரும் தான் இந்த இழி செயலை தொடர்ந்து செய்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. ஏற்கனவே  எதற்காக மிரட்டப்பட்டார்களோ அதே வழியில் மீண்டும் பயணிப்பது தெளிவாகின்றது.

(படமும் 3 : கட்டமைப்பு மௌனித்தபின்பு ஊடக இல்லம் என்று ஆரம்பித்து பத்திரிகை வெளியீட்டமை)

மொத்தத்தில் இவர்கள் அனைவருக்கும்  எல்லாளன் என்ற அமைப்பு சிக்கலாகவே இருந்தது, எனெனில் இவர்களின் தப்புக்களை அவர்களிடம் மறைக்க முடியவில்லை.2009ம் ஆண்டுக்கு பின்னர் தலைமையின் மௌனிப்புக்கு பின்னர் இவர்கள் அனைவரும் இணைந்து தங்களுக்கு ஒரு தலைமையை உருவாக்கி அதற்கு அனைத்துலகம் என்றும் தலைமைசெயலகம் என்றும் மாறி மாறி கட்டமைப்புகளை உருவாக்கினார்கள் இந்த குழப்ப நிலைகளுக்கு முக்கிய காரணம் பிரான்சு தமிழர் ஒருகிணைப்பு குழுவில் மேத்தா,என்பவர் நன்றாக செயல்பட்டார்.

எல்லாளன் படை ஏன் இவர்களை இலக்கு வைத்தது?

எல்லாளன் படைக்கும் பிரான்சு காவல்துறை கைது செய்த முரளிக்கும் என்ன தொடர்பு?

மீண்டும் வெளியாகும் ஈழநாடு பத்திரிகை ?

ஈழநாடு பத்திரிகை வெளியாகி கொண்டு இருக்கும்போது ஈழமுரசு மீண்டும் வெளியாகிறது! அதிலும் தனி மனித தாக்குதல் இடம்பெறுமா ?

ஈழநாடு பத்திரிகை ஈழமுரசு பத்திரிகையிடம் நஸ்டஈடுகோரி கடிதம் அனுப்புதல் மொத்தத்தில் தேசியம் பேசிய ஈழநாடு பாலச்சந்திரன், ஈழமுரசு ஆதித்தன் என்ன செய்வார்கள் ? யார் தேசியத்தின் பெயரில் நல்ல உழைப்பாளிகள் !

அடுத்த தொடரில்  பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com