Breaking News
Home / புலனாய்வு / மீண்டும் ஈழமுரசும் புலம்பெயர் தமிழர்களும் !! பாகம் 1

மீண்டும் ஈழமுரசும் புலம்பெயர் தமிழர்களும் !! பாகம் 1

கடந்த பல காலங்கள் தேசிய வழியில் பயணித்த ஈழமுரசு பற்றி எமது மக்கள் முதலில் அதன் வரலாற்றினை அறிந்து கொள்ள வேண்டும். ஆதித்தன்  என்ற குழுவினர் சொல்லும் இந்த வரலாறு தேசிய வரலாறு என பொருள் படுமா ?

தாயகத்தில் ஈழமுரசு பத்திரிகை வெளிவந்து, இந்திய இராணுவத்தால் அந்த ஊடகம் தகர்த்து அழிக்கப்பட்ட பின்னர் தாயகத்தில் ஈழமுரசு பத்திரிகை வெளிவராமல் போனதும், அத்துடன் தாயகத்தில் வெளிவந்த ஈழமுரசு பத்திரிகையும்  அதன் பெயரும் அணைந்துபோனதும் வரலாறு.

அதன் பின்பு 1990ம் ஆண்டுகளில் கேணல் கிட்டுவின் காலப்பகுதியில் பிரான்சில் இருந்து ஈழமுரசு பத்திரிகை வெளிவரத்தொடங்கியது.
கப்டன் கஐன் அவர்களை ஆசிரியராக கொண்டு ஈழமுரசு பத்திரிகை மெல்ல மெல்ல வளர்ந்து பின்பு கப்டன் கஐன் அவர்கள் வீரச்சாவு அடைய தாயகத்தில் இயங்கிய அனைத்துலக கட்டமைப்புக்குள் ஈழமுரசு பத்திரிகை கொண்டுவரப்பட்டு தாயகத்தில் இருந்த சில செய்தியாளர்களைக் கொண்டு இந்த பத்திரிகை புலம்பெயர் தமிழ்மக்களுக்கு தாயக களநில செய்திகளை தரவேண்டும் என்ற எண்ணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது.


இதற்கு இன்னுமொரு காரணமும் உள்ளது ஏற்கனவே பிரான்சில் வெளியாகிய கொண்டிருந்த ஈழநாடு பத்திரிகையில் எமது தேசியப்போராட்டத்தை அந்த பத்திரிகை கொச்சைப்படுத்தியதும்,எமது போராட்டத்தை வைத்து வியாபாரம் நடத்தியதாலும் புலம்பெயர் தேசத்தில் தேசியத்தை பிரதிநிதி படுத்தும் பத்திரிகை ஒன்று தேவையென்று அன்று கட்டமைப்பு நினைத்தது தான்.
2003ம் ஆண்டின் காலப்பகுதியில் இந்த ஊடகத்தின் பொறுப்பினை ஆதித்தன் என்பவரை திரு கஸ்ரோ அவர்கள் நியமித்தார் அதே நேரம் கனடா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் இந்த ஈழமுரசு பத்திரிகையும் வெளிவரத்தொடங்கியது, கனடாவில் ரஞ்சன் என்பவரை  நியமித்து இந்த பத்திரிகை வெளிவந்தது.
இந்த பத்திரிகையினை பேச்சுவார்த்தை காலத்தில் தாயகத்தில் இருந்த ஊடக இல்லத்தினுடாக பொறுப்பேற்று அதற்கு அன்று பொறுப்பாய் இருந்த நந்தகோபன் அவர்களின் வழிநடத்தலில் இயங்கியது. 2009ம் ஆண்டு போர் உக்கிரமடைந்தபோது இந்த நந்தகோபன் ஏற்கனவே தனக்கு அறிமுகமாகிய வெளிநாட்டு தொடர்புகளை கொண்டு தன்னையும் தனது குடும்பத்தையும் நகர்த்தி மலேசியாவில் தங்கியிருந்தார்.

இவருக்குரிய நிதிகளை கனடாவில் இயங்கிய ஈழமுரசின் பொறுப்பாளர் திரு ரஞ்சன் அவர்கள் மக்களின் நிதியில் இருந்து பெருந்தொகையான பணத்தினை வழங்கி அங்கு சிக்கிய போராளிகளை பாதுகாக்கவென நந்தகோபன் நிதிகேட்க அவரிடம் கொடுத்தார்.ஆனால் கடைசியில் நந்தகோபன் தன்னுடைய குடும்பத்தையும், தன்னுடைய துணைவியாரின் குடும்பத்தை மாத்திரம் தான் காப்பற்றினார் என்று தெரியவர இவர்களுக்குள் கருத்துவேறுபாடு தொடங்கியது.

இந்த நேரத்தில் தன்னை  தமிழீழத்தேசியத்தலைவர் தான் அனுப்பினார் என்று கூறித்திரிந்த இரும்பொறை அல்லது அரவிந்தன் அவர்கள் தான் தான் அனைத்துலகத்தின் பொறுப்பாளர் என மூடிசுடிக்கொண்டார்.அப்போது இந்த நந்தகோபன் இரும்போடு இணைந்து தன்னையும் வளர்த்துக்கொண்டார்.

இப்போது இரும்பொறை -நந்தபோபன் இருவரும் நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.
ஆதித்தனும் ரஞ்சனும் நண்பர்களாக இருந்தவர்கள் பிரிந்து விட்டார்கள் ஏன் ?

என்ன நடந்தது ?

ஏற்கனவே நந்தகோபனிடம் கொடுத்த நிதிப்பிரச்சனையாலும் கருத்துவேறுபாட்டுடன் இருந்த ரஞ்சன் அவர்கள் ஆதித்தனுக்கு நந்தகோபனின் நட்பை நிறுத்த சொல்லி கேட்டார் அனால் ஆதித்தன் கேட்கும்படியாக இல்லை.
உடனடியாக சங்கதி என்ற இணையத்தளத்தை ( www.sankathi.com  இந்த தளம் இப்போதும் இயங்குகின்றது)அன்று தன்னுடைய வங்கி அட்டையில் வாங்கி தன்னுடைய பெயரில் பதிந்து அதை நிர்வாகிக்கும் பொறுப்பினை அதித்தனிடம்  கொடுத்து இருந்த ரஞ்சன்  அனைத்து கடவுச்சொற்களையும் மாற்றி இணையதளத்தை தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார், இப்போது இந்த இணையத்தளத்தில் தன்னுடைய தனிபட்ட செய்திகளை போடமுடியாமல் ஆதித்தனை தனிமைப்படுத்தியிருந்தார் ரஞ்சன்.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது பிரிந்தார்கள்.

இந்த நேரத்தில் ஆதித்தன் அணியினர் தங்களுக்கு வசதியாக இருந்த  இணையம் பறிபோக, இடிந்துபோனார். உடனே சுதாரித்துக்கொண்ட ஆதித்தன் ரஞ்சனை  துரோகி என்ற வர்ணணையுடன் உடனடியாக தன்னுடைய சிறிய சிந்தனையில் உதித்த மூளையைக் கொண்டு தான் பிரசுரிக்கும் ஈழமுரசு பத்திரிகையில் சங்கதி இணையதளம் செயலற்றுபோனதாக ஒரு பொய் செய்தியினை விளம்பரவடிவில் போட்டு ,அதற்கு பதிலாய் ஒரு ஆங்கில எழுத்தினை மாற்றி  www.sangathie.com  சங்கதி என்ற பெயரில் அதே தளம் வருவதாக மக்களை ஏமாற்றினார்.

பின்பு காலம் செல்ல செல்ல  சங்கதி 24 www.sankathi24.com என்ற தேசியத்தளத்தை உருவாக்கி இப்போதும் இந்த கூட்டம் நடத்தி வருவது நீங்கள் அறிந்தது- இந்த தளம் கூட இன்று தேசியத்தளம் என்ற போர்வையில் தான் வருகின்றது.

இதற்கு அனைத்துலகத்தில் இருந்த தமிழர் ஒருகிணைப்புக்குழுவினரும் உடந்தையாகவும் இருந்தனர், காரணம் தங்களின் பொய்யான பரப்புரைகளை இந்த ஆதித்தன் மாஸ்டரை விட்டு விட்டால் வெளிக்கொணரமுடியாது என்ற ஓரே காரணத்தால்.

தமிழ்தேசிய ஊடகம் என்றால் என்ன ? இதையும் ஒரு முறை பார்த்துவிட்டு ஆதித்தன் பற்றி அறியலாம்.

2009ம் ஆண்டுக்கு முன்னர் இயங்கிய சங்கதி இணையத்தளம் (இது கட்டமைப்பு இருந்த காலத்தில் தமிழ் தேசியஊடகம் என்று கூறியது இல்லை அனால் இப்போது இதுவும் தேசிய ஊடகம் என்றே சொல்லியுள்ளார்கள்) இதை இன்று ரஞ்சன் என்பவரால் நிர்வாகிக்கப்படுகின்றது.அப்படியானல் தன்னுடைய தில்லு முல்லு வேலையால்  பெயர்கள் மாற்றி அமைக்கப்பட்ட புதிய சங்கதி இணையதளம் இன்று எப்படி தேசியத்தளம் என்று பொருள்படும் ? அப்படி என்றால் 2011ம் ஆண்டு பிறகு தொடங்கிய அனைத்தும் தேசியம் என்று பொருள்படுமா!!!

தமிழீழத்தின் தேசிய ஊடகங்கள், பத்திரிகை, வானொலி, தொலைகாட்சி,போன்றவை தாயகத்தில் இயங்கியவை ஒரு போதும் புலம்பெயர் தேசங்களில் இயங்கியவைகளை எமது தேசிய ஊடகம் என்று எமது அமைப்பு அறிவிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே 2009ம் ஆண்டுக்கு பின் இவர்களே தேசியத்தின் பெயரினை கொண்டு தங்கள் வயிற்றினை வளர்க்க முற்பட்டார்கள். என்பது இங்கு வெட்ட வெளிச்சமாக தெரியவருகின்றது.

இப்படி தனியாக ஐரோப்பாவில் வெளிவந்து கொண்டிருந்த ஈழமுரசு பத்திரிகை மெல்ல மெல்ல சுருண்டு  நிதியிண்மை என்ற பெயரில் பாரிசில் மட்டும் வெளிவரத்தொடங்கியது. அதே நேரம் அனைத்து தொடர்புகளையும் விட்டு கட்டமைப்புகளை கடந்து கனடாவில் ரஞ்சன் தலைமையில் ஈழமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டுதான் இருந்தது, அதேபோல் அவுஸ்ரேலியாவிலும் ஈழமுரசு பத்திரிகை வெளிவந்தது.

கனடாவில் பத்திரிகைவெளிவருவது  ஆதித்தன் குழுவினருக்கு பெரும் தலைவலியாக இருந்தது, நந்தகோபன், இரும்பொறை,ஆதித்தன் இவர்கள் மூவரும் இணைந்து ஒரு தீட்டம் போட்டார்கள் தாங்களே கனடாவிலும் பத்திரிகை வெளியீடப்போகிறோம் என்று சொல்லி   புலத்தில் என்ற நாமத்துடன் பத்திரிகையினை வெளியீட்டார்கள் அனால் வந்த வழியே அது நின்று போனது. எனெனில் இவர்களின் தில்லு முல்லு அங்கு சாத்தியப்படவில்லை. ஏற்கனவே ரஞ்சன் அங்கு காலுன்றி நின்றபடியால் இவர்களினால் சாதிக்க முடியவில்லை. இன்று வரை கனடாவில் ரஞ்சன் அவர்களால் பத்திரிகை வெளியீடப்படுகின்றது.

2009ம் ஆண்டுக்கு பின்னர் ஆதித்தன் குழுவினர் தங்களை கேட்க ஆள் இல்லை என்ற எண்ணம் ஏற்படத்தொடங்கியது, இதற்கு சில பொறுப்பாளர்கள் இவர்களுக்கு  துணைபோனதையும் நாம் அறிவோம்.

முழுமையாக எதிரியின் கைபொம்மையாக மாறியிருந்த நந்தகோபன் தன்னுடைய எண்ணத்தை செயலாக்க ஈழமுரசு ஊடகத்தை பயண்படுத்தியிருந்தார்.இதற்கு முழுமையான ஆதரவினை தன்னுடைய சொந்த ஊடகம் என்ற நினைப்பில் ஆதித்தன் அவர்கள் அனுமதித்து செயல்பட்டார். காரணம் முன்பு பூபாலம் என்ற பெயரில் இயங்கிய காரியாலயத்தை நந்தகோபன் அவர்களின் கட்டளைக்கு அமைய  தாயகத்தில் இயங்கிய ஊடக இல்லம் என்ற பெயரில் இங்கு பதிவு செய்துகொண்டார்கள்.

ஏற்கனவே புங்குடுதீவினை பிறப்பிடமாக கொண்ட ஆதித்தன் பாரிசில் உள்ள வர்த்தகர்கள் பலரும் புங்குடுதீவினை சார்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய நாசகாரத்திட்டத்தினை அவர்களின் நிதியினைக்கொண்டே செய்யதுணிந்தார்,அதற்கு விளம்பரம் என்று பெயர் வைத்தார்.

இலவச பத்திரிகையாக ஈழமுரசு வெளிக்கொணரவேண்டும் என்று அவரே முடிவு செய்து வர்த்தக பெருமக்களிடம் விளம்பரங்களை பெற்று பத்திரிகையினை வெளியீட்டார். தாயகத்தில் கட்டமைப்பு இருந்தபோதே சிறிய விலைக்கு விற்ற பத்திரிகையினை இன்று ஏன் இலவசமாக கொடுக்க வேண்டிய தேவையேற்பட்டது. என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், மக்களால் கைவிடும் நிலைக்கு ஈழமுரசு ஆக்கப்பட்டதும், இதனால் வேறு வழியின்றி இந்த இழிநிலைக்கு இவர்கள் இறங்கி இலவசம் என்ற நிலைக்குள் வரவேண்டிய கட்டயத்தை உருவாக்கியது.

அதே நேரம் வர்த்தகர்களிடம் விளம்பரத்தையும்,உண்டியலில் விரும்புவதை போடுங்கள் என பிச்சை எடுக்க தொடங்கினார்கள் இந்த ஆதித்தன் குழுவினர். அப்போதும் இவர்களுக்கு வந்த அந்த பணம் காணமல் போகவே இனி பத்திரிகையினை ஐம்பது சத யூரோவுக்கு விற்கலாம்  என்றார்கள் ?

இந்த தொழிலை செய்து கொண்டே பின்னால் மிகப்பெரிய  தேசவிரோத செயல்களையும் செய்தார்கள்.

புலம்பெயர் தேசத்தில் 2009ம் ஆண்டுக்கு பின்னர் வந்த போராளிகளை ஏதிரியின் கைகூலிகளெனவும், தலைமைசெயலகம், கேபி அணி, அது இது என்று பல அணிகளை உருவாக்கி , இவர்கள் எமக்கு வேண்டாதவர்கள் என முத்திரை குத்த தொடங்கினார்கள்.

இதற்கு தமிழர் ஒருகிணைப்பு குழுவில் இருந்தவர்கள் பலர் ஆதித்தனுக்கு ஆதரவாக இருந்தார்கள்.

இதில் பிரான்சு பரப்புரை பொறுப்பாளர் மேத்தா நம்பர் ஒன்று என்பது அங்கு வசிக்கும் பலருக்கு தெரியும். அவர் இத்தாலியில் தொடங்கி இன்று வரை இந்த தொழிலை நன்றாக செய்துவருகின்றார்.
(இவரை பற்றி இன்னுமொரு கட்டுரையில் பார்ப்போம்)

ஆதித்தனுடன் ஒற்றுமையை விரும்பாத, இன்னும் சிலர் தேசத்தின் சொத்துக்களை வைத்திருப்போர் என அவர்களும் இணைந்துகொள்ள ஆரம்பித்தனர்.
எனெனில் இவர்கள் இன்றுவரை ஒற்றுமையை விரும்பாதவர்கள்.

அதில் முன்னனியில் இருப்பவர் :குமணன் தாளம் விடியோ வேலை பார்ப்பவர்.

2009ம் ஆண்டு புலம்பெயர் தேசத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குறிப்பாக பிரான்சில் எந்தவொரு இடத்திலும் ஆதித்தனையோ, குமணனையோ காணமுடியாது, தன்னுடைய அலுவலகம், லாசப்பல் கடையில் சாப்பாடு என மக்களை பற்றி கவலைகூட கொள்ளமால் இருந்தவர்கள் தான் இந்த ஆதித்தன் குழுவினர்.

இவர்கள் களமுனையில் இருந்து வந்தவர்களை பற்றி விமர்சிப்பதற்கு என்ன உரிமையுள்ளது ?

ஆதித்தனுடன் எப்பவும் இரு அறிவாயுதம் உள்ளது அதன் பெயர் கோபிராஜ் மற்றும் ஜெய்சந்தர் என்ற இரண்டு நபர்கள்.

இதில் கோபிராஜ்  ஒரு அச்சகத்தில் பணியாற்றி அந்த அச்சகத்தை தனது பெயரில் பதிவு செய்ய முற்பட்ட வேளையில் பிடிபட்டு ஒடி வந்து இந்த ஆதித்தன் குழுவோடு இணைந்து திரிகின்றார்.
இந்த துரோககூட்டம் தங்களுக்கு இடைஞ்சலாக இருப்பவர்களை  விமர்சிக்க தொடங்கினார்கள், அந்த வகையில் மின்னஞ்சல் அனுப்புதல் கறுப்பு இணைய பத்திரிகை வெளியீடுதல்,தங்களுக்கு பிடிக்காதவர்களை வசைபாடுதல்,மின்னஞ்சல்அனுப்புதல், என இவர்களின் செற்பாடுகள்  2009ம் ஆண்டுக்கு பின்னர் இருந்து கடந்த ஆண்டு உயிருக்கு பயந்து ‘இடைவிலகின்றோம்” என்ற ஓப்பாரி செய்யும்வரை வரை சிறப்பாய் செய்து முடித்தார்கள்;.

தங்களை யாரும் தட்டி கேட்க முடியாது தாங்களே ஊடக விபச்சாரிகள்,யாரை பற்றி எழுதினாலும் கேட்கமாட்டார்கள் என்ற இறுமாப்போடு சிங்கள அரசின் துணிவோடும்,விடுதலையை நேசித்தவர்கள் அழிந்துவிட்டார்கள் என்ற இறுமாப்போடுமே இருந்தார்கள். இந்த உண்மைக்கும் இடி விழுந்தது.

யாரோ தங்களை மிரட்டியதாகவும்,துப்பாக்கியால் கொலை செய்ய வந்ததாகவும், கூறிய ஆதித்தன் குழுவினரை துக்கம் விசாரிக்க  அடுத்த நாள் எல்லோரும் ஆதித்தனின் காரியாலயம் சென்றார்கள். அனால் இவர்களால் பாதிக்கப்பட்டோர் மிகவும் சந்தோசப்பட்டார்கள்.

உடனே இவர்கள் பிரான்சு காவல்துறையில் முறைபாடினை பதிவு செய்துள்ளார்கள் காவல்துறையின் விசாரணையில் ஆரம்பத்தில் துப்பாக்கி என்றும் பின்பு சரியாக அடையாளம் தெரியவிலையென்றும்,அது ஒரு தடியாக இருக்கலாமென்றும்,ஆதித்தன் தனது வாக்குமூலத்தை வழங்கினார்.

அவரது அயல் வீட்டு நண்பரும் இதைவிட ஒரு படி மேற் சென்றுவாக்குமூலத்தை வழங்கியிருந்தார் அதே போல இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் வெள்ளையினப்பெண் தனது வாங்குமூலத்தில் அது ஒரு துவிச்சக்கரவண்டிக்கு காற்று அடிக்க பயண்படும் காற்றுவழங்கி என்றும் காவல்துறையில் சொல்லியுள்ளார்.

ஆதித்தன் குழுவினர் போட்ட முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட காவல்துறையினர்,எல்லாளன் அறிக்கையில் இவர்களை விலகுமாறு கூறப்பட்டு இருந்தது அதனையும் மொழிபெயர்த்து பார்த்த காவல்துறையினர் இந்த மிரட்டல் கடிதம் எந்த இணைய வழங்கியில் இருந்து அனுப்பப்பட்டது என்ற முறையில் அறிந்து பிரான்சில் இருந்த முரளி என்பவரின் இணைய வழங்கயில் தான் அனுப்பபட்டதும் அவரும் அதில் இணைந்து செயல்பட்டு உள்ளார் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதனால் 3மாதம் கழித்து ஒரு காலை பொழுதில் அவரை  கைது செய்துள்ளார்கள்.

காவல்துறையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தகுந்த பதில்களை வழங்கிய அவர், தான் சிலருக்கு உதவி செய்ததாகவும் அதே நேரம் ஆதித்தன் பற்றிய முழு செயல்பாடுகளையும் பிரான்சின் ரகசியம் அறியும் காவல்துறைக்கு முழுமையான ஆதாரத்துடன் வழங்கியிருந்தார்.

இந்த நேரம் காவல்துறைக்கு ஆதித்தன் பற்றிய தகவல்களை அவர் அறிந்துகொண்டார்கள்.

அதே நேரம் இந்த ஆதித்தன் குழுவினருக்கு சாட்சியாக திருச்சோதி,அலெக்ஸ் அகியோரும் காவல்துறை சென்று முரளிக்கு எதிரான வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தார்கள். என்று காவல்துறை முரளியிடம் தெரிவித்து இருந்தது என்பதை அவர் எமக்கு தெரிவித்து இருந்தார்
எனவே 48மணி நேர விசாரணையின் பின் முரளி அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்.
காவல்துறையால் ஆதித்தன் குழுவினருக்கு இந்த முறைப்பாட்டின் பதிலை தெரிவிக்கும் வண்ணம்  அவருக்கு தாங்கள் விசாரணை செய்துள்ளோம்,இவரின் இணையமுகவரியில் இருந்து தான் உங்களுக்கு எல்லாளன் கடிதம் அனுப்பப்பட்டது என்று தெரிவிக்க உடனே ஆதித்தன் இதை கபே பாராத் உரிமையாளர் மதியிடம் சொல்லியுள்ளார்.
மதி மெல்ல நகர்ந்து இதை பிட்டுகடை என்று சொல்லப்படும் கிருஸ்னாவிடம் சொல்லியுள்ளார்,அதே போல் ஆதிதனும் அங்கு போய் சொல்லியுள்ளார் தன்னை துப்பாக்கியால் மிரட்டியது முரளி தான் என்று அதே நேரம் தங்களின் கூட்டுகளவாணிகள் அனைவருக்கும் இதை சொல்லியுள்ளார்கள்.

3 மாதங்களுக்கு பின்னார் பிரான்சின் 93பகுதியான பொபினியில் அமைந்துள்ள நிதிமன்றத்தில் 16.02.2015 அன்று இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அங்கு தனது தப்புதாளங்களுடன் பிரசன்னமாகியிருந்த ஆதித்தன் குழுவினர் எதோ மிகப்பெரிய தீர்ப்பு வழங்கப்படும் என்பதை நினைத்திருந்தார்கள் போல
அங்கு கடைசியாக எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில் தான் இதற்கு உதவி செய்ததாகவும்,கடிதம் அனுப்ப உதவிகள் வழங்கியதாகவும்,காரணம் தேசியம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் தில்லு மூல்லுகள் என்பவற்றை தானும் அறிந்து கொண்டதால் இதை செய்ய வேண்டி வந்ததாகவும் முரளி கூறியிருந்தார்.

ஏற்கனவே காவல்துறையின் விசாரணையில் தெளிவாக எல்லாம் கூறியிருந்தபடியால் இதை நிதிபதி உடனே புரிந்துகொண்டார்
அதே நேரம் இந்த பிரான்சு நாட்டில் இப்படி செய்ய கூடாது,இனி இப்படியான செயல்பாடுகளை செய்ய கூடாது என்றும் ஒருவருடத்த்துக்குள் இப்படியான வேறு எந்த குற்றத்திலும் ஈடுபடக்கூடாது என்று கூறி வெளியில் விட்டு இருந்தார்கள் இது தான் உண்மையில் அங்கு நடந்தது.

அதே நேரம் ஆதித்தன் குழுவினர் தங்களின் வழக்காடுணருடன் வந்திருந்தபோதும் அங்கு கோபிராஜ் என்பவர் தான் தங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று வாதிட்டார்.களவினை தொழிலாக செய்யும் இவர்கள் இன்னும் தங்களுக்கு பணம் வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்கள்,அனால் நிதிபதி இலவசமாக கொடுக்கும் பத்திரிகைக்கு என்ன இழப்பீடு தரவேண்டும் என்று கேட்டு அதை நிராகரித்தார்.

வழக்கு நிறைவுக்கு வந்தது….

இதன் பின் நடந்தது பாகம் 2ல் தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com