Breaking News
Home / பாக்கள் / சுனாமி தந்த துயரம்

சுனாமி தந்த துயரம்

மூசி மூசி அடித்த அலைகளின் அகோரம்
இன்னும் மூச்சோடு முனகிக்கிடக்கிறது


ஊசி முனையில் உயிர் தப்பிய கணங்கள்
இன்னும் உயிரை பிழிகிறது

பசியோடு கிடந்த வயிற்றின் துயரம் தீர்த்த கடல்
மனிதப்பசியோடு வந்த கோரம்
நிசியாகிப்போன நெய்தல் நிலத்தில்
இன்னும் ஒளிவீசவில்லை

பசியும் பட்டினியும் தொடர்கதையாகியது
நசிவும் நலிவும் மலிவாகிப்போனது
கசிகின்ற விழிகளில் துயரத்தின் கீறல்
கயலின் பிடரியில் அடிமையின்கோலம்

நாசிப்படைகளின் கூரிய வாளுக்குள்
பூசி மெழுகிய அரசியல் சாயம்

தூபிகளைக்கூட துவம்சம் செய்த பாவியர்
திதிகளை செய்யவும் கிலிகொண்டனர்
நதியாய் சல சலத்த தாயகதேசத்தில்
நரிகளின் ஊளை காதை பிளக்கிறது
சவியின் வாழ்வை சரிசெய்ய மறந்து
சதியின் மடியில் சலாம் போடும் சன்னதம்

தை பிறந்தால் வழி பிறக்குமா?
இல்லை முந்தைய முனகலில்தான்
தாய்மண் திளைக்குமா?

-மனோ-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com