Breaking News
Home / பாக்கள் / உலகத் தமிழனே மே18 உனது துக்கதினமாகும்

உலகத் தமிழனே மே18 உனது துக்கதினமாகும்

உறுதி கொள் !
உலகத் தமிழனே
மே18 உனது  துக்கதினமாகும்
முள்ளி வாய்க்கால் அது

முடிந்து போன அத்தியாயமல்ல
அதை மறந்திடத்தான்
முடியுமா தமிழா ?
பச்சிளம் குழந்தைகளின்
அழுகுரல் கேட்கிறதா தமிழா ?
துடிதுடித்து மாண்ட
எம்மிளம் யுவதிகளின்
கதறல்கள் உன் காதில் விழுகிறதா தமிழா ?
கர்ப்பிணித் தாய்மாரின்
அவலக்குரல் தான்  உன் நெஞ்சைத்
தொடவில்லையா தமிழா  ?
வீரக் களமாடிய
எம் மாவீரர்களின் உறுதிகொண்ட
நம்பிக்கைகள் வீழ்ந்ததை மறந்தாயா தமிழா ?
நம் மக்களின் குருதியில் உறைந்த
நந்திக்கடலை ஒரு முறை திரும்பிப்பார் தமிழா ?
வீரம் பிறந்த மண்ணில்
விடியாதா தமிழீழம் என்றேங்கும்
தமிழர்களை உணர்வாயா தமிழா  ?
விதைக்கப்பட்ட மாவீரரர்
சமாதிகளில் சத்யம் செய்வோம் வா தமிழா !
புரட்சிகள் தோற்றுவிடாது
அது பூத்துவிடும் காலம் வரும் தமிழா !
தன் மானம் கொண்ட
தமிழர் நாமென்று உறுதி கொள்வோம் தமிழா!
தாய்மண்ணை முத்தமிட்டு
மறுபடியும் களம் புகுவோம் தமிழா !
விழித்தெழு தமிழா
இன்றே உறுதிகொள்  தமிழா !
*சுவேதா*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com