Breaking News
Home / புலனாய்வு / அனைத்துலகமா ? அவையா கட்டமைப்புக்குள் கட்டமைப்பு கட்டி குழப்பம் செய்வது யார் ? பகுதி -1

அனைத்துலகமா ? அவையா கட்டமைப்புக்குள் கட்டமைப்பு கட்டி குழப்பம் செய்வது யார் ? பகுதி -1

முள்ளிவாய்க்கால் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் ஓடி முடிந்த இந்த வேளையில் எமது இனத்திற்கென்றே அமைந்த சாவக்கேடாக எம்மோடு கூட இருந்தே எமக்கு துரோகம் செய்யும் எம் இனதத்தவர்களால் இன்னும் எம் மண்ணும் மக்களும் பல கொடுமைகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.

தனது சுதந்திரத்திற்கான போராடிய இனம் இன்று உண்ண உணவின்றி, உடையின்றி, உறைவிடமுமின்றி தமது அத்தியாவசிய தேவைகளுக்காக கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த இழிநிலைக்கு யார் காரணம் ?

விடுதலைப்புலிகள் இயக்கம் மிகவும் தூர நோக்கு பார்வையோடு தங்கள் வளங்களை தமிழீழத்தில் மட்டும் வைத்திருக்காது தமிழர் வாழும் அத்தனை புலம்பெயர் நாடுகளிலும் வைத்திருந்தனர். தமிழ் மக்கள் தங்கள் மண்மீட்பு போருக்காக கொடுத்த பணங்களில் ஒரு பகுதியை புலம்பெயர் தேசங்களில் முதலீட்டாக்கி பல தரப்பட்ட வர்த்தக நிறுவனங்களை உருவாக்கி வைத்திருந்தனர் விடுதலைப்புலிகள்.  அதே போன்று பரப்புரை அரசியல் மற்றும் மக்களை இணைக்கும் வேலைத்திட்டங்களுக்காக தங்களை பிரதிநிதிப்படுத்தும் அமைப்புக்களையும் வழி நடத்தி வந்தனர்.

மே 2009 ல் விடுதலைப்புலிகள் அமைப்பு பெருமளவிலான அழிப்புக்கு உள்ளானதோடு மீதம் இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதனால் புலம்பெயர் தேசங்களில் இயங்கி வந்த விடுதலைப்புலிகளின் அத்தனை கட்டமைப்புக்களும் வர்த்தக நிறுவனங்களும் தன்னிச்சையாக இயங்க வேண்டிய சூழ்நிலைக்கு உருவானது. அத்தோடு இந்நிறுவனங்களையும் உப கட்டமைப்புக்களையும் வழிநடத்திச ;செல்லவேண்டிய தழிழர் ஒருங்கிணைப்புக்குழுக்கள் அந்த கடமையிலிருந்து தவறிவிட்டன.

அதனால் விடுதலைப்புலிகளின் சொத்துக்கள் யாவும் எவர் எவரின் பெயரில் இருந்ததோ அவர் அவரே அதை தனதுடமையாக்கி கொள்ள வசதியாகிவிட்டது. இதன் விளைவு தடுப்புகாவல்களில் இருந்த எமது போராளிகளுக்கோ, மாவீரர்-போராளி குடும்பங்களுக்கோ எந்தவொரு உதவிகளும் செய்யப்படவில்லை. மக்கள் கொடுத்த பணங்களில் தங்கள் சொத்துகளை பல மடங்காக்கியும் பிரமாண்டமாக விழாக்கள் செய்தும் மிகவும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள் இந்த துரோகிகள்.

இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் புலம்பெயர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் செய்த ஒரே வேலை என்னவெனில் 2009 வரை எழுச்சியாக எமது உரிமைக்காக குரல் கொடுத்த மக்களை, விரக்தி கொண்டு இப்படியான நிகழ்வுகளில் பங்கு கொள்ளாது போகும் அளவிற்கு அந்த நிகழ்வுகளை நடாத்திவந்தது மட்டுமே.

தடுப்புக்காவலில் இருந்து விடுபடுகின்ற போராளிகள் புலம்பெயர் தேசங்களுக்கு வந்த பின்பு அவர்கள் இந்த புலம்பெயர் கட்டமைப்புக்களுடன் சேர்ந்து செயற்பட்டு தாயக மக்களின் விடிவிற்காக உழைக்கமுற்பட்வேளைகளில் புலம்பெயர் கட்டமைப்புக்கள் அவர்களை சிறீலங்காவின் உளவாளிகள் என கூறி அவர்களுக்கு உரிய வரவேற்பை கொடுக்காமல் உதாசீனம் செய்தார்கள். ஒன்றாக நின்று பணியாற்றாமுடியவில்லை என்று தெரிந்த பின்பு உருவான அமைப்பு தான் தலைமைச்செயலகம் நடுவம் இன்னும் பல…இது இவ்வாறிக்க 2009 வரை புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கணைப்புக்குழுக்கள் அத்தனையையும் வழி நடத்துவதற்காக அனைத்துலக பொறுப்பாளராக நெடியவன் இருந்து வந்தார். 2009 க்கு பின்னர் விடுதலை அந்த பொறுப்புக்கு வந்தார். அதன் பின் இரும்பொறையும் நந்தகோபனும் அந்த பொறுப்பில் இருந்தனர்.

இதில் தன்னிச்சையாக பெரும் நிதியுடன் நெடியவன் ஒதுங்கி கொள்ள அந்த இடத்தை ஏற்கனவே அமைப்பில் ஊழல் செய்தபடியால்  ஒதுக்கியிருந்த குட்டி அல்லது மயுரன் அந்த பொறுப்பினை எடுத்துக்கொண்டார்.
தாயகத்தில் இருந்து மெல்ல மெல்ல மெல்ல நகர்ந்த இரும்பொறை ஐரோப்பா வந்து தன்னை தேசியத்தலைவர் தான் அனுப்பி வைத்தார் என்று செய்தியுடன் அனைத்துலகத்தை வழிநடத்தவந்தார். ஏற்கனவே ஆட்டம் கண்டு இருந்த அனைத்துலகத்தை 2009ம் ஆண்டுக்கு பின்னர் வந்த இருபொறையால் மெல்ல மெல்ல அனைவரையும் இணைத்து செயல்படுத்தினார்.

அனால் இதுவரை பொறுப்பில் இருந்த எவராலும் தாயக மக்களுக்கான எந்தவொரு ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் செயய்யப்படாமலிருக்கவே பிரான்சில் வசித்து வந்த கோகுலன் அவர்கள் அனைத்துலக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அவர் ஒரு பழைய போராளி என்பதாலும் அவரை பொறுப்பில் அமர்த்தியபோது சில போராளிகள் தாயகத்தில் இயங்கு நிலையில் இருந்தபோது புலம்பெயர் தேசத்தில் இருந்த அத்தனை கட்டமைப்புக்களும் ஒரு அணியல் சேர வேண்டு;ம் என முடிவெடுக்கப்பட்டது.  அதற்கமையவே ஐரோப்பாவில் இயங்கிவந்த நடுவம் கலைக்கப்பட்டது.

இருந்தபோதும் நடுவத்தில் இருந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு சென்ற எவரையும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நேரம் அனைத்துலகமோ தமிழர் ஒருங்கணைகப்புக்குழுக்களோ தங்களது வழமையான பாணியை விட்டு தாயக மக்கள் நோக்கி பார்வையை செலுத்தவோ அல்லது எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கேட்கவோ ஆக்கப+ர்வமாக செயற்படவோ முன்வரவில்லை.
இவற்றையெல்லாம் கவனித்து வந்த விடுதலைப்புலிகளின் இயங்கு நிலை போராளிகள்  இனியும் பொறுத்திருப்பது பயனற்றது என முடிவெடுத்து அனைத்துலக பொறுப்பாளராக நாயகன் என்பவரை நியமித்தனர்.
இந்த நியமனம் பெல்ஐpயம் நாட்டில் வைத்து கோகுலன் அவர்களால் பெப்ரவரி 8ம் திகதி அனைத்துலகத்தின் கிழ் இயங்கும் கிளைப்பொறுப்பாளர்கள் முன்னிலையில் நாயகன் அவர்கள் இனி அனைத்துலகத்தின் பொறுப்பாளராய் நியமிக்கப்பட்டார்.

மீண்டும் பெல்யியம் நாட்டில்  நாயகன் தலைமையிலான அனைத்துலக செயலகம் முதற்கட்டமாக அனைத்து கட்டமைப்புக்களையும் ஒன்றிணைப்பதற்கான வேலையை செய்யத் தொடங்கினர். அதற்கிணங்க பெல்ஜியத்தில் அன்று சந்திப்பொன்றை நடாத்தி அதில் “அவை” ஒன்றை செயற்படுத்தலாம் என ஆலோசிக்கப்பட்டது. அந்த அவை பற்றிய தெளிவான முடிவு எட்டப்படாத நிலையில் அன்றைய சந்திப்பு நிறைவடைந்தது.

பின்பு மே மாதம் 02ம் திகதியும் 3ம் திகதியும் ஜேர்மனியில் அடுத்த சந்திப்புகளுக்hக ஒழுங்குகள் செய்யப்பட்டன. இதில் 02ம் திகதி அனைத்து போராளிகளுக்குமான சந்திப்பு என்றும் அதில் பல அணிகளாக பிரிந்து நிற்கும் கட்டமைப்புக்களை ஒன்றாக்குவது என்பதுவும் 03ம் திகதி தமிழர் ஒருங்கிணைப்பு  குழுக்களின் பொறுப்பாளர்களுக்hகன சந்திப்பு என்பதுவும் நிகழ்ச்சி நிரல். இது இவ்வாறிருக்க “அவை” யை நிறுவுவதற்காக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்களால் திட்டமிடப்;பட்டு சுவிசில் மே 3ம் திகதி சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்திப்பானது அனைத்துலக பொறுப்பாளரின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் நாயகன் எவரது பேச்சையும் கேட்காது தான் மட்டுமே பொறுப்பாளர் என கூறுவதாகவும், முதலில் “அவை” யை ஏற்றுக்கொண்டதாகவும் பின்பு மறுத்ததாகவும் என பல தரப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை நாயகன் மீது சுமத்தி நாயகனை தவிர்த்து “அவை” யை நிறுவுவது என முடிவெடுத்து அந்த சந்திப்புக்கான எந்தவொரு தகவலையும் நாயகனுக்கு இதன் ஏற்பாட்டாளர்கள் தரவில்லை.

அனைத்துலகம் தலைமைச் செயலகம் நடுவம் என சிதறிகிடந்த கட்டடைப்புக்களை ஒன்று படுத்தும் பணியில் ஈடுபட ஆரம்பித்த வேளை அனைத்துலகமே இரண்டாக பிளவுபடுவதா என அச்சம் எழுந்தது. இதை தடுக்கும் முகமாக எடுத்த முயற்சியில் கிருஸ்ணா(புட்டுக்கடை) என்பவர் நாயகனை “அவை” சந்திப்புக்கு வரவேண்டும் என வலியுறுத்தியதோடு அந்த சந்திப்பு பற்றிய தகவல்களையும் வழங்கியிருந்தார்.

ஒற்றுமைக்காக நியாயமான விட்டுக்கொடுப்புக்களை செய்த தயாராகவிருந்த நாயகன் மே 2ம் நாள் தலைமைச்சயெலகம் நடுவம் போன்றவற்றில் அங்கம் வகித்த போராளிகள் உட்பட்ட அனைத்து போராளிகளையும் சந்தித்து, அனைவரிடமும் ஒன்றாக பயணிக்க வேண்டிய கட்டாயத்தை எடுத்துக்கூறி அனைவரினதும் சம்மதத்தையும் பெற்று விட்டார். தற்போது அனைத்து கட்மைப்புக்களும் ஒரே அணியில் வந்துவிட்டன. அடுத்து மே 3ஆம் நாள் ஜேர்மனியில் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பை இரத்து செய்து விட்டு கிருஸ்ணா கேட்டுக்கொண்டதுக்கமைய நாயகன் சுவிஸ் நோக்கி சென்றார். அங்கு சந்திப்பு நேரத்துக்கு முன்னதாகவே சென்ற நாயகனை ரகுபதி, சந்தோஷ், மகேஷ் ஆகியோர் தனியாக அழைத்து தாங்கள் அவையை நடைமுறை படுத்த போவதாகவும் தங்களுக்கு சந்திப்புக்கு நேரமாகுவதால் தாங்கள் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் எனவும் கூறி விட்டு சென்று விட்டார்கள்.

யார் எதற்காக ஒற்றுமையை குலைக்கின்றார்கள்?

அடுத்த தொடரில் இன்னும் விரிவாக யார் இந்த குழப்பவாதிகள்

ஏன் எதற்காக இந்த குழப்பம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com