Breaking News
Home / பிரதான செய்திகள் / பெப்ரவரி 4 கரிநாள் நள்ளிரவு பேர்லினில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு முன்னால் அதன் அரசிலமைப்பு பிரதி எரிக்கப்பட்டது .

பெப்ரவரி 4 கரிநாள் நள்ளிரவு பேர்லினில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு முன்னால் அதன் அரசிலமைப்பு பிரதி எரிக்கப்பட்டது .

பெப்ரவரி 4 கரிநாள் நள்ளிரவு பேர்லினில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு முன்னால்  அதன் அரசிலமைப்பு பிரதி எரிக்கப்பட்டது .

பெப்ரவரி 4. 1948 ஈழத்தமிழ் மக்கள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாத கரிநாள். இந்நாள் ஆங்கிலேய அரசினால் தமிழினம் சிங்களத்திடம் சிறை வைக்கப்பட்டநாள். தமிழர் தேசம் தன் இறைமையைச் சிங்கள தேசத்திடம் முழுமையாக இழந்த கரிநாள். சிங்கள தேசத்தால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புக்கும் தமிழர்களின் வாழ்வியல் சிதைப்புக்கும் கலாச்சாரச் சீரழிவுக்கும் உட்படுத்திப் புதிய முகவரி எழுதத் தொடங்கிய கரிநாள். இலங்கைதீவில் இரு தேசங்கள் என்ற நிலையில், சுதந்திர தமிழீழத்துக்காக போராடி வருகின்ற ஈழத்தமிழர்கள், சிங்கள தேசத்தின் சுதந்திரநாளை கரிநாளாக வெளிப்படுத்தி வருகின்றோம்.

சிங்களம் ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தமிழர் தேச இனவழிப்பை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கத் தொடங்கிய நாள். கடந்த 68 ஆண்டுகாலமாக பல லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்களின் இழப்புக்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள பேரினவாத அரசுகளினால் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக வெளிப்படுத்துவதோடு,தமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள் மீது தொடரும் சிங்கள தேசத்தின் இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்தும், தமிழீழ தேசத்தின் இருப்பையும், இறமையையும் வலியுறுத்தியும் இலங்கைத்தீவில் சுதந்திரத்துக்காக போராடிவருகின்ற இனமாக , ஈழத்தமிழினம் உள்ளதென்பதனையும் சர்வதேசத்தின் செவிகளுக்கு எடுத்துரைத்து தமிழருக்கான ஒரு நிரந்தர நீதி கிடைக்கும் வரை ஓயோமென இக்கரிநாளில் உறுதிகொள்வோம் .

அந்தவகையில் யேர்மனி பேர்லினில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு முன்னால் அதன் அரசிலமைப்பு பிரதி எரிக்கப்பட்டு ,ஒற்றையாட்சி முறைமையை நிராகரிகின்றோம் என எதிர்ப்பு காட்டப்பட்டது . அத்தோடு சிறிலங்கா தூதரகம் அமைந்துள்ள வீதிகள் எங்கும் சிங்கள பேரினவாத அரசு மேற்கொள்ளும் தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் நூற்றுக்கும் மேலான படங்கள்   மரங்களில் தொங்கவிடப்பட்டு காட்சியளித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com